டி20 கிரிக்கெட்ல மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்கள் இவ்ளோ சக்ஸஸ்ஸாக காரணமே இதுதான் – பிராவோ பேட்டி

Bravo
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தாண்டி டி20 வடிவ போட்டிகளானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகியவை நாட்கள் கணக்கில் நடப்பதனால் அதனை நேரில் காண்பதற்கோ அல்லது தொலைக்காட்சி வாயிலாக காண்பதற்கோ ரசிகர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் டி20 போட்டிகள் என்பது மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை மட்டுமே நடைபெறும் என்பதனால் அந்த போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எனவே டி20 கிரிக்கெட்டால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் வடிவமும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிற ஒரு பெரிய அபாய குரலும் இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் அதிரடியான பேட்டிங், எதிர்பாராத திருப்பம், கடைசிநேர த்ரில்லர் என ஏகப்பட்ட சுவாரஸ்யத்தை டி20 போட்டிகள் வழங்கி வருவதால் டி20 கிரிக்கெட் தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் பலரும் பெரிய அளவில் ரன்களை வாரி கொடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுமோ என்று அழுத்தம் இல்லாமல் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்துவீசுவதில் சிரமத்தை எதிர்கொள்வது குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் பயிற்சியாளர் பிராவோ கூறுகையில் :

- Advertisement -

டி20 பவுலர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களால் யார்க்கர் வீச முடியும் என்று தெரிந்தும் அவர்களது திறமையை நம்புவது கிடையாது அதனால்தான் அதிகப்படியான அழுத்தத்தில் செல்கின்றனர். சிஎஸ்கே அணியில் இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களும் யார்க்கர் பந்து வீசுவதை உறுதி செய்யும் விதமாக பயிற்சியின்போது நாங்கள் 12 முதல் 15 யார்க்கர் பந்துகளை வீச வைத்து பயிற்சி அளித்து வருகிறோம்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் கேப்டனாக தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன தெரியுமா?

டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்ட மலிங்கா மற்றும் தற்போதுவரை அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா போன்ற பவுலர்களின் இவ்வளவு பெரிய சக்சஸ்-க்கு காரணமே அவர்களது யார்க்கர் பந்துகள் தான். அவர்களிடம் இயல்பாகவே சிறப்பாக யார்க்கர் வீசும் திறன் அதிகம் காணப்படுகிறது என பிராவோ பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement