சி.எஸ்.கே அணியின் கேப்டனாக தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன தெரியுமா?

Ruturaj
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் போட்டி பரபரப்புக்கும் மற்றும் விறுவிறுப்புக்கும் குறைவில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அசத்தினார்.

- Advertisement -

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி ஆரம்பத்திலேயே ரகானே மற்றும் டேரல் மிட்சல் ஆகியோரது விக்கெட் விரைவாக இழந்து சரிவில் சிக்கியது.

பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபேவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கெய்க்வாட் தனி ஆளாக ஒரு புறம் அணியை தாங்கி எடுத்து வந்தார். மறுபுறம் சிவம் துபே அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி பந்தில் தோனி வந்து ஒரு பவுண்டரி அடித்தார்.

- Advertisement -

இதன் மூலம் சென்னை அணி 210 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு சென்றது. இருப்பினும் அதனை எதிர்த்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாட் ஐ.பி.எல் தொடரில் சதம் அடிக்கும் எட்டாவது கேப்டனாக தனது பெயரை பதிவு செய்தார்.

இதையும் படிங்க : அஜித் பாய் ப்ளீஸ் இவரை 2024 டி20 உலகக் கோப்பைக்கு செலக்ட் பண்ணுங்க.. ரெய்னா கோரிக்கை

அதோடு சேர்த்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2019-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 84 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்த வேளையில் சென்னை அணிக்காக முதல் சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement