அஜித் பாய் ப்ளீஸ் இவரை 2024 டி20 உலகக் கோப்பைக்கு செலக்ட் பண்ணுங்க.. ரெய்னா கோரிக்கை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்யாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அதனால் 2வது முறையாக இந்த சீசனில் சென்னையை வீழ்த்திய அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோற்ற சென்னை 4வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் சதமடித்து 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அதை சேசிங் செய்த லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதமடித்து 124* ரன்கள் விளாசி கடைசி ஓவரில் லக்னோவை அபார வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ரெய்னா கோரிக்கை:
முன்னதாக இந்தப் போட்டியில் சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் ஒருபுறம் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்புறம் ரஹானே 1, டேரில் மிட்சேல் 11, ஜடேஜா 16 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் அதிரடியாக ரன் குவிப்பதற்கு சென்னை தடுமாறிய போது களமிறங்கிய சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் பேட்டிங் செய்தார்.

குறிப்பாக யாஸ் தாக்கூர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய அவர் மொத்தமாக 3 பவுண்டரி 7 சிக்சருடன் 66 (27) ரன்கள் குவித்தார். அதனால் ஆரம்பத்தில் 180 ரன்களாவது தொடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை கடைசியில் 210 ரன்கள் குவித்து அசத்தியது. இதே போல கடந்த வருடம் விளையாடிய சிவம் துபே 418 ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதே ஃபார்மில் இந்த வருடமும் பட்டையை கிளப்பும் அவர் 8 போட்டிகளில் 311* ரன்களை 169.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அதனால் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் துபே தேர்வு செய்ய வேண்டும் என்று யுவராஜ் சிங் வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: சொதப்பிய சஹர், ருதுராஜின் 3 முடிவுகள்.. சிஎஸ்கே அணிக்கு தோல்வியை கொடுத்த காரணங்கள்

அந்த வரிசையில் இணைந்துள்ள சுரேஷ் ரெய்னா டி20 உலகக் கோப்பையில் துபே தேர்ந்தெடுங்கள் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை ட்விட்டரில் டேக் செய்து நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உலகக் கோப்பை வாய்ப்பு சிவம் துபேவுக்கு லோடிங் ஆகிறது. அஜித் அகர்கர் பாய் ப்ளீஸ் இந்தியாவுக்காக அவரை தேர்ந்தெடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement