சொதப்பிய சஹர், ருதுராஜின் 3 முடிவுகள்.. சிஎஸ்கே அணிக்கு தோல்வியை கொடுத்த காரணங்கள்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் லக்னோவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைச் சேசிங் செய்த லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதமடித்து 124* (63) ரன்கள் விளாசி 19.3 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தார். அதனால் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் இந்த சீசனில் முதல் முறையாக சென்னை தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த 6 போட்டிகளில் சென்னை 4 – 5 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

காரணம் என்ன:
1. முன்னதாக இந்த வருடம் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட டேரில் மிட்சேல் சுமாராக விளையாடியதால் கடந்த போட்டியில் நீக்கப்பட்டார். ஆனால் முதலிரண்டு போட்டிகளை தவிர்த்து சுமாராக செயல்பட்ட ரச்சின் ரவீந்தராவுக்கு பதில் இப்போட்டியில் மீண்டும் அவரை கேப்டன் ருதுராஜ் தேர்வு செய்தார். அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய மிட்சேல் 11 (10) ரன்களில் அவுட்டாகி பின்னடைவையே கொடுத்தார்.

2. அதே போல இதற்கு முந்தைய போட்டிகளில் சிவம் துபே 4வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். ஆனால் கடந்த போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கி மெதுவாகவே அரை சதமடித்த ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் அதை விட மோசமாக விளையாடி 16 (19) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தார். எனவே துபேவுக்கு முன் ஜடேஜாவை களமிறக்கிய கேப்டன் ருதுராஜின் முடிவு சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

3. பந்து வீச்சில் தீபக் சஹர் ஆரம்பத்திலேயே 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பொதுவாக புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய அவரை தோனி பவர் பிளே முடிவதற்குள் 3 ஓவர்கள் வீச வைத்து சிறப்பாக பயன்படுத்துவார். ஆனால் இப்போட்டியில் புதிய கேப்டன் ருதுராஜ் அவருக்கு 2 ஓவருக்கு மேல் வழங்காதது ஏன் என்பது அவருக்கே வெளிச்சமாகும்.

4. அத்துடன் சேப்பாக்கத்தில் எப்போதுமே 2 ஸ்பின்னர்கள் ரன்களை கொடுத்தாலும் கூட 8 ஓவர்களை வீசினால் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றுவார்கள். ஆனால் இப்போட்டியில் ஜடேஜா மற்றும் மொய்ன் அலி ஆகியோருக்கு கேப்டன் ருதுராஜ் தலா 2 ஓவர்கள் வீதம் மொத்தமாக 4 ஓவர்கள் மட்டுமே கொடுத்தது மறைமுக காரணமானது.

இதையும் படிங்க: ரிவியூவில் கலக்கிய தல தோனி.. கோபத்தில் தண்ணீர் பாட்டிலை எறிந்த தருணம்.. காரணம் என்ன?

5. இறுதியில் 18, 19வது ஓவரில் பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்த தீபக் சஹார் முறையே தீபக் ஹூடா, ஸ்டோனிய்ஸ் அடித்த 2 பவுண்டரிகளை கோட்டை விட்டது தோல்வியை உறுதி செய்தது.

Advertisement