ரிவியூவில் கலக்கிய தல தோனி.. கோபத்தில் தண்ணீர் பாட்டிலை எறிந்த தருணம்.. காரணம் என்ன?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல், நிக்கோலாஸ் பூரான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். ஆனாலும் 3வது இடத்தில் களமிறங்கி சென்னை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட மார்க்கஸ் ஸ்டோனிஸ் 13 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 124* (63) ரன்கள் குவித்து 19.3 ஓவரில் லக்னோவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கோபமான தோனி:
அதனால் பதிரனா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் 8 போட்டுகளில் 4வது தோல்வியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்தது. முன்னதாக இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி பேட்டிங்கில் கடைசி பந்தை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் அதில் பவுண்டரியை அடித்த அவர் மீண்டும் தம்மை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்து சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்தார்.

அதற்கு முன்பாகவே சிவம் துபே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங்கில் லக்னோ பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது தோனி பேட்டிங் செய்ய வருகிறாரா என்பதை ரசிகர்களுக்கு காண்பிப்பதற்காக அடிக்கடி கேமராமேன் பெவிலியன் பக்கம் கேமராவை திருப்பினார்.

- Advertisement -

அதை பார்த்த தோனி “களத்தில் விளையாடும் வீரர்களை காண்பிக்காமல் என்னை ஏன் அடிக்கடி காட்டுகிறீர்கள்” என்ற வகையில் கோபமடைந்து கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை விளையாட்டாக கேமராமேன் வீசி எறிவது போல் சென்று மீண்டும் கையிலேயே வைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பந்து வீச்சில் 13வது ஓவரின் கடைசி பந்தை மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு எதிராக துஷார் தேஷ்பாண்டே ஒய்ட் போன்ற போல வீசினார்.

இதையும் படிங்க: 17 ஆண்டுகால ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கெதிராக மகத்தான சாதனையை நிகழ்த்திய – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்

அப்போது களத்தில் இருந்த நடுவர் அந்தப் பந்தை ஒயிட் என்று அறிவித்தார். இருப்பினும் அது ஒயிட் கிடையாது என்று கருத்திய தோனி நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரிவியூ எடுத்தார். அதை சோதித்த 3வது நடுவர் தோனி செல்வது போல இது ஒய்ட் கிடையாது என்று தீர்ப்பை மாற்றி வழங்கினார். அதனால் தோனி ரிவியூ சிஸ்டம் மீண்டும் வெற்றி பெற்றதாக சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் முன்னாள் கேப்டனை பாராட்டினர்.

Advertisement