17 ஆண்டுகால ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கெதிராக மகத்தான சாதனையை நிகழ்த்திய – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்

Stoinis
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அனியானது 211 ரன்கள் என்கிற இலக்கினை எதிர்த்து சேசிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு புள்ளி பட்டியலிலும் 5 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதன் பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியானது ரன் எதுவும் எடுக்காமலே குவிண்டன் டி காக் விக்கெட்டையும், 33 ரன்களில் எடுத்திருந்தபோது கே.எல் ராகுல் விக்கெட்டையும் இழந்தது.

அதனை தொடர்ந்து லக்னோ இவ்வளவு பெரிய இலக்கை எப்படி துரத்தும் என்று எதிர்பார்த்த வேளையில் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்த வந்த வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 63 பந்துகளை சந்தித்த அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 124 ரன்களை அதிரடியாக குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற வழி வகுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை சிஎஸ்கே அணிக்கெதிராக நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஸ்டாய்னிஸ்ஸ வச்சி நான் போட்ட அந்த ஒரு பிளான் தான் வெற்றிக்கு காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

அந்த வகையில் இந்த 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக ஒருபோட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக சேவாக் திகழ்ந்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியின் போது 122 ரன்களை அவர் சிஎஸ்கே அணிக்கெதிராக விளாசியிருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை கடந்துள்ள ஸ்டாய்னிஸ் 124 ரன்களை சிஎஸ்கே அணிக்கு எதிராக அடித்து தற்போது சேவாக் சாதனையை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement