ஸ்டாய்னிஸ்ஸ வச்சி நான் போட்ட அந்த ஒரு பிளான் தான் வெற்றிக்கு காரணம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் துபே 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்களையும், பூரான் 34 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் ஸ்பெஷலான ஒரு போட்டி. அதிலும் குறிப்பாக இது போன்ற ஒரு வெற்றி மிகச் சிறப்பான உணர்வை தருகிறது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் விக்கெட்டை இழந்ததும் அதிலிருந்து மீண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. 170 முதல் 180 ரன்களில் சென்னை அணியை சுருட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் சென்னை அணியின் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்தனர். அதேபோன்று எங்களது அணியில் ஸ்டாய்னிஸ் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவர் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் கிலவராகவும் இந்த போட்டியில் விளையாடியிருந்தார். அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார்.

இதையும் படிங்க : 210 ரன்ஸ் பத்தல கன்ட்ரோலும் கிடைக்கல.. அந்த ஒன்னு தான் சிஎஸ்கே தோல்விக்கு காரணம்.. ஒப்புக்கொண்ட ருதுராஜ்

மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் பயமற்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன் காரணமாகவே பவர்பிளேவில் ஒரு விக்கெட் விழுந்த போதும் அவரை களம் இறக்கினோம். அந்த முடிவு மிகச் சரியான அமைந்துதோடு சேர்த்து எங்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தது. ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்டில் தற்போது இம்பேக்ட் விதிமுறை இருப்பது மேலும் பேட்டிங்கின் ஆழத்தை அதிகரிக்கிறது என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement