210 ரன்ஸ் பத்தல கன்ட்ரோலும் கிடைக்கல.. அந்த ஒன்னு தான் சிஎஸ்கே தோல்விக்கு காரணம்.. ஒப்புக்கொண்ட ருதுராஜ்

Ruturaj CSK 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 108* (60), சிவம் துபே 66 (27) ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 16, டீ காக் 0, தேவ்தூத் படிக்கல் 13, நிக்கோலஸ் பூரான் 34 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் கடைசி வரை அவுட்டாக்காமல் சென்னை போவலர்களை வெளுத்து வாங்கி 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் 124* (63) ரன்கள் குவித்து மாஸ் ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
அதனால் 19.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய லக்னோ சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக சாதனை படைத்தது. அதன் காரணமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தங்களுடைய ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று சென்னை கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

அதே காரணத்தால் தாங்கள் அடித்த 210 ரன்கள் போதவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்ட அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இது விழுங்க வேண்டிய கடினமான மாத்திரையாகும். இது நல்ல போட்டியாக அமைந்தது. கடைசி நேரத்தில் லக்னோ சிறப்பாக விளையாடியது. நாங்கள் 13 – 14 ஓவர்கள் வரை போட்டியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் ஸ்டோய்னிஸ் மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார்”

- Advertisement -

“பனி தன்னுடைய வேலையை செய்தது. அது அதிக அளவில் இருந்ததால் எங்களுடைய ஸ்பின்னர்களை போட்டியிலிருந்து வெளியே எடுத்தது. ஒருவேளை அது இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிக கட்டுப்பாட்டை வைத்து போட்டியை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்றிருப்போம். ஆனால் இது போட்டியின் ஒரு அங்கமாகும். அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது”

இதையும் படிங்க: 124 ரன்ஸ்.. பால் வல்தாட்டியின் சாதனையை தூளாக்கிய ஸ்டோய்னிஸ்.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் மாஸ் சாதனை

“பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் ஜடேஜா முன்கூட்டியே பேட்டிங் செய்தார். பவர் பிளே முடிந்ததும் விக்கெட் விழுந்தால் துபே பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பது எங்களுடைய எண்ணமாகும். அதற்காக ஒருவரை நீங்கள் அவுட்டாகுமாறு வற்புறுத்த முடியாது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் போதே பனியின் தாக்கத்தை நாங்கள் பார்த்தோம். அதனால் எங்களுடைய இலக்கு போதாது என்று நினைக்கிறேன். ஆனால் லக்னோ பேட்டிங் செய்த விதத்திற்கு பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement