124 ரன்ஸ்.. பால் வல்தாட்டியின் சாதனையை தூளாக்கிய ஸ்டோய்னிஸ்.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் மாஸ் சாதனை

Marcus Stoinis 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் சென்னையை அதன் சொந்த மண்ணில் லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் செய்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108* (60), சிவம் துபே 66 (27) ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இருப்பினும் அதை சேசிங் செய்த லக்னோவுக்கு துவக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் 16, குவிண்டன் டீ காக் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக வந்த தேவதூத் படிக்கல் மிகவும் திணறலாக விளையாடி 13 (19) ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதற்கடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாட முயற்சித்து 34 (15) ரன்கள் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் சாதனை:
அதனால் லக்னோவின் வெற்றி கேள்விக்குறியான போதிலும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கியிருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி சென்னை பவுலர்களை புரட்டி எடுத்த அவர் சதமடித்து 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் 124* (63) ரன்கள் குவித்து அபார ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் தீபக் ஹூடா 17* (6) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரிலேயே இலக்கை தொட்டு லக்னோ அபார வெற்றி பெற்றது. அதனால் சிஎஸ்கே அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக லக்னோ சாதனை வெற்றியை ருசித்தது. அத்துடன் இந்த வருடம் தொடர்ந்து 2வது முறையாக நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்து வெற்றி கண்ட லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 124* ரன்கள் குவித்த ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் இந்தப் போட்டியின் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற பால் வல்தாட்டியின் 13 வருட சாதனையை உடைத்துள்ள அவர் மாபெரும் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் : 124*, சென்னைக்கு எதிராக, சேப்பாக்கம், 2024*
2. பால் வல்தாட்டி : 120*, சென்னைக்கு எதிராக, மொஹாலி, 2011
3. வீரேந்திர சேவாக் : 119, டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிராக, ஹைதராபாத், 2011

இதையும் படிங்க: அது ரொம்ப டேஞ்சரான ரூல்.. ஆஸி டீம்ல எனக்கு இடம் இடம் கிடைக்காதுன்னு தெரியும்.. ஆட்டநாயகன் ஸ்டோய்னிஸ் பேட்டி

மேலும் இப்போட்டியின் வாயிலாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 2வது வீரர் என்ற சாதனையையும். அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. குவிண்டன் டீ காக் : 140*, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022
2. மார்கஸ் ஸ்டோய்னிஸ் : சென்னைக்கு எதிராக, 2024*
3. கேஎல் ராகுல் : 103*, மும்பைக்கு எதிராக, 2022

Advertisement