அது ரொம்ப டேஞ்சரான ரூல்.. ஆஸி டீம்ல எனக்கு இடம் இடம் கிடைக்காதுன்னு தெரியும்.. ஆட்டநாயகன் ஸ்டோய்னிஸ் பேட்டி

Stoinis LSG
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற 39வது லீக் போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அதனால் இந்த சீசனில் இரண்டாவது முறையாக சென்னையை அதுவும் சொந்த மண்ணில் வீழ்த்திய லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து 108* (60), சிவம் துபே 66 (27) ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 16, டீ காக் 0, படிக்கல் 13, பூரான் 34 என முக்கிய வீரர்கள் ஒருபுறம் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி வரை அவுட்டாகாமல் சென்னை பவுடர்களை புரட்டி எடுத்து 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 124* (63) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ஆபத்தான ரூல்:
அதனால் 19.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய லக்னோ சேபாக்கத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக சாதனை படைத்தது. மறுபுறம் பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்த ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஆனால் இப்படி அதிரடியாக விளையாடும் ஸ்டோனிய்ஸ் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டதால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை மிகவும் ஆபத்தாக தெரிவதாக கூறும் ஸ்டோய்னிஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஓப்பனிங் இடத்திற்கு நிறைய பேர் போட்டியிடுகின்றனர். எனவே அவர்களுக்கு நான் வழி விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுகிறேன்”

- Advertisement -

“சில பவுலர்கள் குறி வைப்பேன். அதில் சில எனக்கு எதிராக ஆபத்தை கொடுக்கும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். பூரான், ஹூடா ஆகியோர் நல்ல இன்னிங்ஸ் விளையாடினர். உங்களுக்கு சில பவுலர்கள் பிடிக்கும். பலரை பிடிக்காது. டி20 போட்டிகள் மிகவும் சவாலானது. அங்கே இது போன்ற சில பெரிய ஸ்கோர் அடிக்கப்படலாம். இம்பேக்ட் வீரர் விதிமுறை புதிய பரிணாமத்தை சேர்த்துள்ளது”

இதையும் படிங்க: 13 சிக்ஸ் 6 சிக்ஸ்.. தனி ஒருவனாக நொறுக்கிய ஸ்டோய்னிஸ்.. சிஎஸ்கே கோட்டையை தகர்த்த லக்னோ சாதனை வெற்றி

“அது ஆபத்தாகவும் தெரிகிறது. இப்போதும் நான் என்னுடைய தேசிய அணியின் பயிற்சியாளருடன் நல்ல உறவில் இருக்கிறேன். எனக்கு ஆஸ்திரேலிய அணியின் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பது முன்பே தெரியும். இருப்பினும் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

Advertisement