13 சிக்ஸ் 6 சிக்ஸ்.. தனி ஒருவனாக நொறுக்கிய ஸ்டோய்னிஸ்.. சிஎஸ்கே கோட்டையை தகர்த்த லக்னோ சாதனை வெற்றி

Stoinis 11
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 39வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் தடுமாறிய ரகானே 1 (3) ரன்னில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் தடுமாற்றமாக விளையாடி 11 (10) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ருதுராஜ் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா தடுமாற்றமாக விளையாடி 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 16 (19) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

தகர்ந்த கோட்டை:
இருப்பினும் அடுத்ததாக வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் விளையாடி தடுமாறிய சென்னையை அதிரடி பாதைக்கு அழைத்து வந்து 22 பந்துகளில் அரை சதமடித்தார். அதே வேகத்தில் அசத்திய அவர் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 66 (27) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ருதுராஜ் 12 பவுண்டரி 3 சிக்ஸருடன் 108* (60) ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்காக சதமடித்த முதல் கேப்டனாக சாதனை படைத்தார்.

இறுதியில் தோனி 4* (1) ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் சென்னை 210/4 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 211 ரன்களை துரத்திய லக்னோவுக்கு தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே டீ காக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவரில் கேப்டன் கேஎல் ராகுல் 16 (14) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் அவருடன் சேர்ந்து விளையாடிய தேவதூத் படிக்கள் திணறலாக விளையாடி 13 ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்த பக்கம் அவருக்கும் சேர்த்து அடுத்த ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 50 ரன்கள் கடந்து சென்னைக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிக்கோலாஸ் பூரான் சரவெடியாக 34 (15) ரன்கள் குவித்து மிரட்டிய போது பதிரனா வேகத்தில் அவுட்டானார்.

ஆனாலும் இந்த பக்கம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய ஸ்டாய்னிஸ் சதமடித்து 14 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 124* (63) ரன்கள் விளாசினார். அவருடன் தீபக் ஹூடா 17* (6) ரன்கள் அடித்ததால் 19.3 ஓவரிலேயே 213/4 ரன்கள் அடித்த லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் 2வது முறையாக சென்னையை அதுவும் சொந்த மண்ணில் தோற்கடித்தது.

இதையும் படிங்க: 210 ரன்ஸ்.. லக்னோவை பந்தாடிய துபே.. தல தோனியையே மிஞ்சிய ருதுராஜ்.. சிஎஸ்கே அணிக்காக சரித்திர சாதனை

அதனால் ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையையும் லக்னோ படைத்தது. இதற்கு முன் 2012இல் பெங்களூருவுக்கு எதிராக சென்னை 206 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் சென்னையை சேப்பாக்கத்தில் தோற்கடித்த லக்னோ அதனுடைய கோட்டையை தகர்த்து வெற்றி பெற்றது. அதனால் சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியை சந்தித்தது.

Advertisement