210 ரன்ஸ்.. லக்னோவை பந்தாடிய துபே.. தல தோனியையே மிஞ்சிய ருதுராஜ்.. சிஎஸ்கே அணிக்காக சரித்திர சாதனை

CSK vs LSG 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 39வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த போட்டியில் தோல்வியை கொடுத்த லக்னோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து ஓப்பனிங்கில் களமிறங்கிய ரகானே ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக விளையாடி 1 (3) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் எதிர்ப்புறம் அசத்தலாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 11 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

ருதுராஜ் சாதனை:
இருப்பினும் இந்த பக்கம் தொடர்ந்து அசத்திய ருதுராஜ் 39 பந்துகளில் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அப்போது வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய ஜடேஜா 16 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

அடுத்ததாக வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடத் துவங்கினார். குறிப்பாக யாஸ் தாக்கூர் வீசிய 16 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் தடுமாற்றமாக விளையாடிய சென்னை அணியை அதிரடி பாதைக்கு கொண்டு வந்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய ருதுராஜ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி பவுண்டரியுடன் சதமடித்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சதமடித்த முதல் கேப்டன் என்ற மாபெரும் சரித்திரத்தையும் ருதுராஜ் படைத்துள்ளார். கடந்த 2008 முதல் 2023 வரை ஜாம்பவான் தோனி பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடியதால் சதமடிக்கவில்லை. ஆனால் இம்முறை கேப்டன்ஷிப் பொறுப்பை பெற்ற முதல் வருடத்திலேயே ருதுராஜ் அபாரமாக விளையாடி தோனியையே முந்தி வரலாற்றில் சதமடித்த முதல் சிஎஸ்கே கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த ஒரு திறமை தெரியாத பவுலர் வாழவே முடியாது.. பதிரனாவுக்கு கோச்சிங் கொடுக்கிறதில்ல.. ப்ராவோ பேட்டி

அவருடன் சேர்ந்து டெத் ஓவரில் பட்டையை கிளப்பிய சிவம் துபே 22 பந்துகளில் அரை சதமடித்து 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 66 (27) ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத ருதுராஜ் 12 பவுண்டரி 3 சிக்ஸருடன் 108* (60) ரன்கள் விளாசினார். இறுதியில் கடைசி பந்தில் தோனி பவுண்டரி அடித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் சென்னை 210/4 ரன்கள் குவித்தது.

Advertisement