முதல்ல டாஸ் ஜெயிக்க கத்துக்கணும்.. லக்னோ போட்டியில் ரவீந்திராவை நீக்கிய ருதுராஜ்.. சிஎஸ்கே பிளேயிங் லெவன்

Ruturaj CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 39வது லீக் போட்டி துவங்கியது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த போட்டியில் தோல்வியை கொடுத்த லக்னோவை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் இந்த போட்டியையும் சேர்த்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தொடர்ந்து ஏழாவது முறையாக டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தார். அதனால் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்த அவர் இனிமேல் பேட்டிங்கையும் சேர்த்து டாஸ் வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சென்னை அணி:
அத்துடன் இப்போட்டியில் சிஎஸ்கே அணியில் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா நீக்கப்பட்டு டேரில் மிட்சேல் சேர்க்கப்படுவதாகவும் ருதுராஜ் அறிவித்தார். காயமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக இந்த வருடம் துவக்க வீரராக களமிறங்கிய ரவீந்தரா முதல் 2 போட்டிகளில் அற்புதமாக விளையாடினார். ஆனால் அதன் பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

அதனால் அவரைப் போட்டியில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ருதுராஜ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் நாணயம் வீசுவதில் நான் வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக நான் ஏழு முறை அதில் தோல்வியை சந்தித்துள்ளேன் என்று நினைக்கிறேன். போட்டியின் பிற்பகுதியில் பனி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இருப்பினும் ஆடுகளம் உங்களை ஆச்சர்யப்படுத்துமா என்பது தெரியாது”

- Advertisement -

“எனவே களத்திற்கு சென்று உங்களுக்கு நீங்களே விளையாட வேண்டும். எங்களுடைய அணியில் ரச்சினுக்கு பதிலாக டேரில் வந்துள்ளார். இந்த போட்டியையும் சேர்த்து அடுத்த 3 போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுவது நல்லது. ஆனால் அதில் நாங்கள் சில டாஸ் வெற்றியும் பெற வேண்டும். இருப்பினும் வெற்றி பெறுவதற்கு நீங்கள் முதலில் பேட்டிங் செய்கிறீர்கள் அல்லது பந்து வீசுகிறீர்கள் என்பதை தாண்டி நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாண்டியாவை மட்டும் குறை சொல்லாதீங்க.. ரோஹித் போறதுக்கு முன்னாடி என்ன செஞ்சாரு? சேவாக் பதிலடி

லக்னோ அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்சேல், மொய்ன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஸ்பாண்டே, முஸ்தபிஷேர் ரஹ்மான் மதிஷா பதிரனா

Advertisement