பாண்டியாவை மட்டும் குறை சொல்லாதீங்க.. ரோஹித் போறதுக்கு முன்னாடி என்ன செஞ்சாரு? சேவாக் பதிலடி

Virender Sehwag 2
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் கீழ் வரிசையில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது.

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மும்பை ரசிகர்களே மைதானங்களில் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வருகிறார்கள். மறுபுறம் அந்த எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடும் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை நேர்த்தியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி காண முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சுமாராக செயல்படும் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் சரியான முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறார்.

- Advertisement -

சேவாக் பதிலடி:
எனவே மும்பை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா முதன்மை காரணமாக அமைந்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 2021, 2022, 2023, 2024 ஆகிய வருடங்களில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா பேட்ஸ்மேனாகவும் அசத்தவில்லை கேப்டனாகவும் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா மீது பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் அழுத்தம் அதிகரித்துள்ளது என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை தன்னைச் சுற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அவர் அழுத்தத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த வருடமும் மும்பை அணி இதே சூழ்நிலையில் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவும் அவர்கள் இதே நிலையில் இருந்தனர்”

- Advertisement -

“கடந்த சில வருடங்களாக கேப்டனாக ரோஹித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த 2 – 3 வருடங்களாக அவர் கேப்டனாக கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும் மும்பை அணி இது போன்ற சூழ்நிலைகளைக் கடந்து கோப்பைகளை வென்ற அணியாக அறியப்படுகிறது. ஆனால் பாண்டியா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக சிறப்பாக பேட்டிங், பவுலிங் செய்ய வேண்டும் என்று நினைத்து அழுத்தத்தை எடுத்துக் கொண்டால் அது தவறாகும்”

இதையும் படிங்க: அந்த ஒரு திறமை தெரியாத பவுலர் வாழவே முடியாது.. பதிரனாவுக்கு கோச்சிங் கொடுக்கிறதில்ல.. ப்ராவோ பேட்டி

“பேட்டிங்கில் அசத்துவதற்கு அவர் மேல் வரிசையில் களமிறங்க வேண்டும். ஏனெனில் கீழ் வரிசையில் களமிறங்கும் போது 18 பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளும் நீங்கள் எப்படி அசத்த முடியும்? எனவே பாண்டியா தமக்குத் தாமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டால் அவருடைய பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப் தாமாக முன்னேறும்” என்று கூறினார்.

Advertisement