அந்த ஒரு திறமை தெரியாத பவுலர் வாழவே முடியாது.. பதிரனாவுக்கு கோச்சிங் கொடுக்கிறதில்ல.. ப்ராவோ பேட்டி

Dwayne Bravo
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வழக்கம் போல பேட்ஸ்மேன்களிடம் சரமாரியாக அடி வாங்கும் பவுலர்கள் பெரும்பாலும் தடுமாற்றமாகவே செயல்படுகின்றனர். போதாக்குறைக்கு இம்பேக்ட் வீரர் போன்ற புதிய விதிமுறை அறிமுகப்பட்டுள்ளதால் அனைத்து அணிகளும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் களமிறங்குகின்றன. எனவே பும்ரா போன்ற ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான பவுலர்கள் ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கப்படுகிறார்கள் என்றே சொல்லலாம்.

குறிப்பாக ஹைதராபாத் அணி இந்த வருடம் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்து அணியாக சாதனை படைத்தது. அந்த வகையில் இப்போதெல்லாம் டி20 கிரிக்கெட்டில் பவுலர்களின் வாழ்க்கை கத்தி மேல் நடப்பது போல் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்நிலையில் ஐபிஎல் இணையத்தில் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் ட்வயன் ப்ராவோ பிரத்தியேகமாக பேசியுள்ளார்.

- Advertisement -

ப்ராவோ கருத்து:
அதில் டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் எவ்வளவு திறமையை கொண்டிருந்தாலும் தரமான யார்க்கர் பந்துகளை வீசத் தெரியாமல் போனால் நீண்ட காலம் வெற்றிகரமாக செயல்பட முடியாது என்று ப்ராவோ கூறியுள்ளார். எனவே அதை வீசத் தெரிந்த மதிசா பதிரனாவுக்கு தாம் பெரும்பாலும் பயிற்சியை கொடுப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“யார்க்கர் இல்லாமல் உங்களால் நீண்ட காலம் விளையாட முடியாது. டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்ட மலிங்கா, பும்ரா அல்லது பதிரனா, என்னை பாருங்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான திட்டத்தை கொண்டிருப்போம். நாங்கள் வித்தியாசமான வேரியசன்களுடன் முடிந்தளவுக்கு யார்க்கர் பந்துகளை வீச முயற்சிப்போம்”

- Advertisement -

“டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய யார்க்கர் பந்துகளை நம்பாததே பல பவுலர்கள் தடுமாறுவதற்கான முதன்மை காரணமாகும். எனவே ஒரு பயிற்சியாளராக நான் ஒவ்வொரு செஷனிலும் ஒவ்வொரு பவுலரும் குறைந்தது 12 – 14 யார்கர்களை வீசுமாறு சொல்வேன். அந்த வகையில் பதிரனா ஸ்பெஷலானவர். அவரை நான் பேபி மலிங்கா என்றழைப்பேன். அவரிடம் இயற்கையாகவே திறன் மற்றும் திறமை இருக்கிறது. எனவே நீங்கள் பயிற்சியை கொடுக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை”

இதையும் படிங்க: நல்லா பாத்துகோங்க.. இவர் தான் டி20 கிரிக்கெட்டின் ப்ராட்மேன்.. புகழ்ந்த அப்ரிடி.. ஆதாரத்துடன் கலாய்க்கும் ரசிகர்கள்

“உலகிலேயே ஸ்லோயர் பந்துகளை சிறப்பாக வீசக் கூடியவர் என்ற பெயர் அவரிடம் இருக்கிறது. இது போன்ற வீரர்களுக்கு நீங்கள் பயிற்சி கொடுக்க முயற்சிக்க தேவையில்லை. அவர்களுடைய அறிவை கொஞ்சம் பட்டை தீட்டி தொடர்ந்து எளிமையாக விளையாட வைத்தால் போதும். பொதுவாக நாங்கள் மைதானத்தின் பவுண்டரி அளவை மனதில் வைத்து பயிற்சிகளை செய்வோம். எனவே எதிரணிகள் உங்களுடைய திட்டத்தை பார்க்கும் போது அது சில நேரங்களில் வேலை செய்யாது. ஆனால் பல நேரங்களில் வேலை செய்யும்” என்று கூறினார்.

Advertisement