- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனிக்கு அப்றம் இதை செஞ்ச ரோஹித்தை.. கழற்றி விட எப்படி மனசு வந்துச்சு? சேவாக் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்தது. அந்த தோல்விகளை ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா உடைத்தது. அந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜோடியாக ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடினர்.

அதனால் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்ற அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலியும் முக்கிய பங்காற்றினார். ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

சிறந்த கேப்டன் சேவாக்:

மறுபுறம் விராட் கோலி, ரோகித் சர்மா சாதாரண வீரர்களாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் தோனிக்கு பின் 2 ஐசிசி கோப்பைகளை வென்று வெற்றிகரமாக செயல்பட்ட ரோஹித் சர்மாவை கழற்றி விட எப்படி மனது வந்தது? என்ற வகையில் விரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை மக்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் தோனிக்கு பின் 2வது சிறந்த இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். தம்மைப் பற்றி குறைவாக சிந்திக்கக்கூடிய ரோஹித் எப்போதும் இந்திய அணி, சக வீரர்கள் கச்சிதமாக இருப்பதைப் பற்றி அதிகமாக சிந்தித்தார்”

- Advertisement -

ஜாம்பவான்கள் ஆதங்கம்:

“ஒரு வீரர் பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தால் நல்ல செயல்திறனை வெளிப்படுத்த முடியாது என்பதை ரோஹித் சர்மா புரிந்து கொண்டார். அதனாலேயே அனைத்து வீரர்களுக்கும் போதுமான ஆதரவைக் கொடுத்த அவர் அனைவரையும் தம்முடன் அழைத்து வந்தார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய ஜஹீர் கான் இது பற்றி தெரிவித்தது பின்வருமாறு. “கோப்பையை வெல்வது ஒரு வகையான உந்துதல்”

இதையும் படிங்க: உலகக் கோப்பை அங்க போய் வெல்வதே லட்சியம்.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. கேப்டன் கில் பேட்டி

“ஆனால் ரோஹித் சர்மாவின் அனுபவம் மிகவும் விரிவானது. ஐசிசி போன்ற பலதரப்பு தொடர் அல்லது ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடும் போதெல்லாம் நீங்கள் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு தொடர்பு கொள்வது, எப்படி தயாராவது போன்ற விஷயங்கள் அவருடைய கேப்டன்ஷிப் செயல்பாடுகளில் பிரதிபலிக்கின்றன. அந்த சாதாரண அணுகுமுறையும் அவருக்கு நன்றாக வேலை செய்தது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -