உலகக் கோப்பை அங்க போய் வெல்வதே லட்சியம்.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. கேப்டன் கில் பேட்டி

Shubman Gill 2
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் 754 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்து மண்ணில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மா 2027இல் 40 வயதில் நல்ல ஃபார்மில், ஃபிட்டாக அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். எனவே இப்போதே அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று கில் கூறியுள்ளார்.

- Advertisement -

சொல்ல வார்த்தையில்லை:

இங்கிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அன்றைய நாளில் ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டது பற்றி பிசிசிஐ இணையத்தில் கில் பேசியது பின்வருமாறு.

“ஒரு குழந்தையாக கிரிக்கெட்டை விளையாடத் துவங்கும் யாருமே இந்தியாவுக்காக விளையாட விரும்புவார்கள். இந்தியாவுக்காக விளையாடுவது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அந்த வாய்ப்பை பெற்றது பெரிய கெளரவம். கேப்டனாக நியமிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது”

- Advertisement -

உலகக் கோப்பை வெல்வதே லட்சியம்:

“இந்த மாநிலம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக நான் கேப்டனாக உள்ளேன். டெஸ்ட் கேப்டனாக என்னுடைய முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் களமிறங்கியுள்ளேன். அப்படி அனைத்து விஷயங்களும் நடைபெற்ற இம்மைதானம் எனக்கு ஸ்பெஷலானது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் உங்களுடைய நாட்டைத் தலைமைத் தாங்குவது மிகப்பெரிய கௌரவம்”

இதையும் படிங்க: எழுதி வெச்சு அடிக்கிறத தவான் தான் கத்துக் கொடுத்தாரு.. அதுக்காக இதை செய்ய சொன்னாரு.. அபிஷேக் பேட்டி

“அது மகத்தான பெருமையானது. அந்த வாய்ப்பில் என்னால் சிறந்த விஷயங்களை செய்ய முடியும் என்று நம்புகிறேன். உலகக் கோப்பைக்கு முன் 20 ஒருநாள் போட்டிகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே மிகப்பெரிய லட்சியம். எங்களில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் உலகக் கோப்பையை வெல்ல முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வோம்” என்று கூறினார்.

Advertisement