IPL 2023 : தோனி, சச்சின் மாதிரி நம்பிக்கையை உருவாக்கிருக்காரு ஆனா அவரால் கூட இனிமேல் அப்டி அடிக்க முடியாது – சேவாக் பாராட்டு

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 31 முதல் துவங்கினாலும் நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி தான் உச்சகட்ட திரில்லர் விருந்து படைத்தது. அந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் நிர்ணயித்த 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் அதிரடியான ரன்களை குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அப்போது ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட 3 முக்கிய வீரர்களை அவுட்டாக்கிய ரசித் கான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவின் வெற்றியை கிட்டத்தட்ட பறித்தார்.

Rinku SIngh

- Advertisement -

ஆனால் மனம் தளராமல் போராடிய ரிங்கு சிங் ஜோஸ்வால் லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை விளாசி யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை பறக்க விட்டு 48* (21) ரன்கள் விளாசி நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஏனெனில் உலக டி20 கிரிக்கெட்டில் அதற்கு முன் கடைசி ஓவரில் எந்த மகத்தான வீரரும் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக அடித்து வெற்றிகரமாக சேசிங் செய்ததே கிடையாது.

மறுபடியும் முடியாது:
அந்தளவுக்கு அசாத்தியமான வெற்றியை தனது தன்னம்பிக்கை மற்றும் போராட்டத்தால் சாத்தியப்படுத்திய ரிங்கு சிங் உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். இதனால் கொல்கத்தா அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் இனிமேல் அது போன்ற சூழ்நிலைகளில் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Rinku-Singh

இந்நிலையில் 90களில் தனி ஒருவனாக சச்சினும் நவீன கிரிக்கெட்டில் கடைசி வரை களத்தில் நின்றால் சிறப்பாக ஃபினிஷிங் செய்து தோனியும் இந்தியாவை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நிலையை போல ரிங்கு சிங் இருந்தால் வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை கொல்கத்தா அணியில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இருப்பினும் வருங்காலங்களில் அவரே நினைத்தால் கூட கடைசி ஓவரில் 5 அல்லது 6 சிக்ஸர்களை அடிக்க முடியாது என்றும் சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக பலமுறை வலைப்பயிற்சியில் யாஷ் தயாளை எதிர்கொண்ட அனுபவத்தின் காரணமாகவே அதை அவரால் செய்ய முடிந்தது என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ரிங்கு சிங் இருக்கும் வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கொல்கத்தா அணியில் ஏற்பட்டுள்ளது. எம்எஸ் தோனி ஃபினிஷிங் செய்ய துவங்கிய போது அவர் இருக்கும் வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. அதே போல் 90களில் சச்சின் இருந்தால் வெற்றி பெறும் இல்லையேல் இந்தியா தோற்கும் என்ற நிலையில் இருந்தது”

sehwag

“தற்போது கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் அதே போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன் அந்த அணியில் ஆண்ட்ரே ரசல் அந்த நம்பிக்கையை வைத்திருந்தார். மேலும் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்தது வரலாற்றில் இதற்கு முன் நடந்ததில்லை. சொல்லப்போனால் ரிங்கு சிங்கால் கூட வரும் காலங்களில் அதை செய்ய முடியாது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனை ஒருவேளை முறியடிக்கப்படலாம்”

இதையும் படிங்க:வீடியோ : ஹாட்ரிக் எடுத்து போராடிய ஹென்றி, வேகத்தில் மிரட்டிய பாக் – தோனியின் ஆல் டைம் சாதனையை செய்த பாபர் அசாம்

“ஆனால் ரிங்கு தன்னுடைய வாழ்நாளில் 6 சிக்ஸர்கள் அடித்து அதை உடைக்க முடியாது. அதற்கு நீங்கள் எப்போதும் சற்று அதிர்ஷ்டம் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அந்த ஓவரை அல்சாரி ஜோசப் வீசியிருந்தால் கூட நம்மால் 5 சிக்ஸர்கள் அடிக்க முடியாது என்பதை ரிங்கு சிங்கே அறிவார். ஏனெனில் யாஷ் தயாளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டுள்ளார். அதனால் அந்த அழுத்தமான சூழ்நிலையிலும் ரிங்கு சரியான மனநிலையுடன் செயல்பட்டார்” என்று கூறினார்.

Advertisement