IPL 2023 : 60 லட்சத்துக்கு அசத்திட்டாரு – கோடிகளை வாங்குன அவர் எத்தனை மேட்ச் ஜெயிச்சு கொடுத்தாரு? பஞ்சாப்பை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி நடைபெற்ற 59வது லீக் போட்டியில் டெல்லியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 167/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 103 (65) ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 2 விக்கெட்கள் எடுத்தார். அதைத் துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் அதிகபட்சமாக 54 (27) ரன்கள் எடுத்தார்.

Prabhsimran Singh

- Advertisement -

ஆனால் பில் சால்ட் 21, மிட்சேல் மார்ஷ் 3, ரிலீ ரோசவ் 5, அக்சர் படேல் 1, மனிஷ் பாண்டே 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வென்ற பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பிரார் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி தன்னுடைய முதல் சதமடித்து அசத்திய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ஷிகர் தவான் 8, லியாம் லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 45/3 என பஞ்சாப் தடுமாறியது.

60 லட்சத்துக்கு அட்டகாசம்:
அப்போது நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்குடன் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் நன்கு செட்டிலான சாம் கரண் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 20 (14) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் முதல் 31 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்த பிரப்சிம்ரன் நேரம் செல்ல செல்ல அதிரடியாக செயல்பட்டு 10 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து சரிந்த பஞ்சாப்பை செங்குத்தாக தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2018இல் 4.8 கோடிக்கு வாங்கப்பட்டார்.

Sam Curran

ஆனால் கடந்த சீசன் வரை ஓரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்ட அவரை கழற்றி விட்ட பஞ்சாப் மீண்டும் இந்த வருடம் வெறும் 60 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. அதில் 12 போட்டிகளில் 334 ரன்கள் குவித்து அவர் அசத்தி வரும் நிலையில் வரலாற்றிலேயே உச்சகட்டமாக 18.5 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கரண் இந்த போட்டி மட்டுமில்லாமல் இந்த சீசன் முழுவதுமே எதிர்பார்த்ததில் பாதியளவு கூட சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

கடந்த சீசன்களில் சென்னை அணியில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2022 டி20 உலக கோப்பையில் ஃபைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றதால் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதை பூர்த்தி செய்யாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவரை போன்ற கோடிக்கணக்கில் செலவழித்து வாங்கப்படும் வீரர்கள் பஞ்சாப் அணிக்கு எப்போதும் அசத்தியதில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

Virender Sehwag

அத்துடன் ப்ரப்சிம்ரன் போன்ற குறைந்த விலைக்கு வாங்கப்படும் வீரர்கள் வெற்றியை பெற்றுக் கொடுப்பதை பார்த்து இனியாவது பஞ்சாப் நிர்வாகம் பாடம் கற்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பிரப்சிம்ரன் சிங்கிற்கு இந்த சீசனில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த பலனை பஞ்சாப் தற்போது அனுபவிக்கிறது. அவர் தற்போது தொடர்ந்து அசத்த துவங்கியுள்ளார். அவரைப் போன்ற வீரர்களால் தான் இந்த சீசனில் பஞ்சாப் வெற்றிகளை பதிவு செய்து வருவதாக நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: IPL 2023 : அநியாயத்தை தட்டி கேட்ட தெ.ஆ வீரருக்கு அதிரடி தண்டனை, அம்பயர்களை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

“சொல்லப்போனால் அவரும் முதல் முறையாக (4.8 கோடி) பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். ஆனால் இம்முறை அவர் குறைந்த பணத்தை பெற்றாலும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக தம்மால் சதமடிக்க முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார். அந்த வகையில் வெறும் 60 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ஒருவர் இந்தளவுக்கு பெரிய ரன்களை அடித்து உங்களுக்கு சில போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது. அதே சமயம் நீங்கள் சாம் கரணை 18.50 கோடிக்கு வாங்கினீர்கள். அவர் என்ன செய்தார்” என்று கூறினார்.

Advertisement