IPL 2023 : அநியாயத்தை தட்டி கேட்ட தெ.ஆ வீரருக்கு அதிரடி தண்டனை, அம்பயர்களை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

Klassen
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 58வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 182/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 47 (29) ரன்களும் அப்துல் சமத் 37* (25) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக கேப்டன் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டீ காக் அதிரடியாக 29 (19) ரன்களும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (25) ரன்களும் எடுத்து அசத்தினர்.

அவர்களுடன் ப்ரேரக் மன்கட் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64* (45) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 4 சிக்சரை தெறிக்க விட்ட நிக்கோலஸ் பூரான் 44* (13) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய லக்னோ சிறப்பான வெற்றி பெற்றது. அதனால் 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

அநியாய தண்டனை:
மறுபுறம் சொதப்பலாக செயல்பட்டு தோல்வியை சந்தித்த ஹைதராபாத் 11 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்து கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்துக்கு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் க்ளாஸென் 19வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய ஒரு பந்தை எதிர்கொண்ட போது இடுப்புக்கு மேலே வந்தது. அதனால் களத்தில் இருந்த நடுவர் வழக்கம் போல நோ பால் கொடுத்து ஃபிரீ ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அதற்கு அதிருப்தியை வெளிப்படுத்திய லக்னோ அணியினர் டிஆர்எஸ் ரிவியூ எடுத்தனர். அதை சோதித்த 3வது நடுவர் பந்து இடுப்பை தாண்டிய போது பேட்ஸ்மேன் அதை அடிப்பதற்காக சற்று குனிந்தவாறு இருந்ததால் நோபால் கிடையாது என்று அப்பட்டமாக களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை மாற்றி வழங்கியது அனைவரையும் ஏமாற்றமடைய வைத்தது. அதனால் ஹென்றிச் க்ளாஸென் நடுவர்களிம் அதிருப்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஹைதராபாத் ரசிகர்கள் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த லக்னோ அணியினர் மீது வீசி எறிந்து கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அப்போது பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர் உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எங்களை யாராலும் அடக்க முடியாது என்ற வகையில் ஹைதராபாத் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை கூச்சலிட்டு கௌதம் கம்பீர் தலைமையிலான லக்னோ அணிக்கு பதிலடி கொடுத்தனர். இறுதியில் நடுவர்கள் உள்ளே புகுந்து சமாதானம் செய்ததால் தொடர்ந்து அந்த போட்டி நடைபெற்ற முடிந்தது. இருப்பினும் நோபால் என்று அப்பட்டமாக தெரிந்தும் அதைக் கொடுக்காத நடுவர்கள் இந்த போட்டியில் நியாயமின்றி மோசமாக செயல்பட்டதாக ஹென்றிச் க்ளாஸென் நேரலையில் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி பேசினார்.

இந்நிலையில் பொதுவெளியில் அம்பயர்களுக்கு எதிராக தேவையற்ற விமர்சனத்தை வைத்த ஹென்றிச் க்ளாஸென் 2.7 விதிமுறை லெவல் 1 பிரிவை மீறியதால் இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதை அவர் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த விசாரணை நடத்தப்படாது எனவும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் அநியாயத்தை தட்டி கேட்டதற்கு தண்டனையா? அப்படியானால் நியாயமற்ற தீர்ப்பை வழங்கிய நடுவர்களுக்கு என்ன தண்டனை? என்று சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:2024 டி20 உ.கோ ஜெயிக்க 2007 மாதிரி விராட், ரோஹித்தை கழற்றி விட்டு இளம் படையை உருவாக்குங்க – முன்னாள் கோச் அதிரடி

அத்துடன் இதே போட்டியில் 9வது ஓவரில் தன்னை சிக்ஸர் அடித்த அன்மோல்ப்ரீத்தை அடுத்த பந்தில் அவுட்டாக்கிய அமித் மிஸ்ரா பந்தை வெறித்தனமாக தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை கொண்டாடினார். அப்படி விளையாட்டின் உபகரணத்திற்கு சேதாரம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவருக்கு 2.2 விதிமுறையின் படி ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை தண்டனையாக அறிவித்துள்ளது.

Advertisement