2024 டி20 உ.கோ ஜெயிக்க 2007 மாதிரி விராட், ரோஹித்தை கழற்றி விட்டு இளம் படையை உருவாக்குங்க – முன்னாள் கோச் அதிரடி

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக தரமான இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்துடன் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளுக்கு நிகரான உலகத்தரம் வாய்ந்த டி20 தொடராக உருவெடுத்துள்ளது. அதே போல இந்த தொடரால் பும்ரா, ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற பல தரமான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இந்தியாவுக்கு கிடைத்தனர் என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது நிறைய வீரர்கள் கிடைத்து வருவதால் ஒரே நேரத்தில் 2 அணிகளை களமிறக்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது.

Yashasvi Jaiswal 2

- Advertisement -

அந்த வரிசையில் இந்த சீசனில் பானி பூரி விற்பவரின் மகனாக பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பைக்காக விளையாடி 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்று முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் 527 ரன்களை குவித்து மிரட்டலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக மும்பைக்கு எதிரான வரலாற்றின் 1000வது போட்டியில் தனி ஒருவனாக 124 (64) ரன்களை விளாசிய அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் அடித்து அதிவேகமாக அரை சதமடித்த வீரராக ஆல் டைம் சாதனை படைத்தார்.

2007 உலககோப்பை மாதிரி:
அதே போல சிலிண்டர் விநியோகம் செய்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கடினமாக உழைத்துப் போராடி கொல்கத்தா அணியில் வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்டு வரலாறு காணாத வெற்றியை பெற்று கொடுத்து லேட்டஸ்ட் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். அத்துடன் லோயர் ஆர்டரில் களமிறங்கி விக்கெட் கீப்பராக அசத்தும் ஜித்தேஷ் சர்மா, மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தும் திலக் வர்மா போன்ற வீரர்களும் இந்த சீசனில் அபாரமாக செயல்படுவதால் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே ஏராளமான முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

INDia Hardik pandya

முன்னதாக 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை உருவாக்கும் திட்டத்தை ஏற்கனவே தேர்வுக்குழு கையிலெடுத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 2007இல் சச்சின், ட்ராவிட், கங்குலி போன்ற சீனியர்கள் இல்லாமல் தோனி தலைமையில் புதிய வீரர்கள் களமிறங்கி கோப்பையை வென்றது போல் 2024 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி வெற்றி காணும் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிரடியாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Shastri

“ஹர்டிக் பாண்டியா ஏற்கனவே டி20 கேப்டனாக இருப்பதால் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் தொடரலாம். தற்போது தேர்வுக்குழு புதிய பாதையில் பயணிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த சமயத்தில் நிறைய இளம் திறமைகள் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரில் நிறைய புத்துணர்ச்சியான புதிய முகங்களை பார்க்க முடிகிறது. எனவே தற்போது பிசிசிஐ 2007 டி20 உலக கோப்பை பாதையில் பயணிக்கும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:IPL 2023 : இந்திய அணியில் கில், விராட் கோலி, ரோஹித்துக்கு போட்டியாக ஆள் வந்தாச்சு – இளம் வீரரை பாராட்டிய கிரேம் ஸ்மித்

“தற்போது இருக்கும் நிறைய திறமைகளில் சிறந்தவற்றை ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யலாம். அவருடைய ஐடியாக்கள் வித்தியாசமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடியுள்ள அவர் நிறைய வீரர்களை பார்த்திருப்பார். இருப்பினும் தற்போதைக்கு 50 ஓவர் உலகக் கோப்பை முடியும் வரை எதை பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. மேலும் ஐபிஎல் முடிந்ததும் பாண்டியா போன்ற வீரர்கள் டெஸ்ட் தொடர் நடைபெறும் போது ஓய்வில் இருப்பார்கள் என்பதால் பணிச்சுமை பிரச்சனையாக இருக்காது” என்று கூறினார்.

Advertisement