IPL 2023 : இந்திய அணியில் கில், விராட் கோலி, ரோஹித்துக்கு போட்டியாக ஆள் வந்தாச்சு – இளம் வீரரை பாராட்டிய கிரேம் ஸ்மித்

Graeme-Smith
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 6 வெற்றிகள் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி போராடி வருகிறது. அந்த அணிக்கு பேட்டிங் துறையில் கடந்த வருடம் அதிரடியாக செயல்பட்டு ஊதா தொப்பியை வென்ற ஜோஸ் பட்லர் இந்த சீசனில் சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அந்த குறை தெரியாத அளவுக்கு மற்றொரு இள்ம் இந்திய தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

Yashasvi Jaiswal 2

- Advertisement -

ஏழை குடும்பத்தில் பிறந்து பாணி பூரி விற்று கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் மும்பைக்காக விளையாடி 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்து சென்ற அவர் சமீப காலங்களாகவே ரஞ்சி கோப்பை, விஜய் ஹசார கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் இரட்டை சதங்களையும் சதத்தையும் அடித்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதே போல ஐபிஎல் தொடரிலும் 2021, 2022 சீசன்களில் முறையே 249, 258 ரன்களை எடுத்து அவர் இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் 575* ரன்களை 167.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணியில் போட்டி:
அதிலும் குறிப்பாக மும்பைக்கு எதிரான வரலாற்றில் 1000வது போட்டியில் இதர ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சேர்ந்து வெறும் 63 ரன்கள் எடுத்த போது தனி ஒருவனாக அடித்து நொறுக்கிய ஜெய்ஸ்வால் 124 (62) ரன்கள் விளாசி மிரட்டலாக செயல்பட்டார். அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் முதல் ஓவரிலேயே வரலாற்றில் உச்சகட்டமாக 26 ரன்களை தெறிக்க விட்டு 13 பந்துகளில் 50 ரன்களை தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

jaiswal 1

அந்த வரிசையில் தற்போதைய டாப் ஆர்டரில் விளையாடும் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோருக்கு போட்டியை கொடுக்கும் அளவுக்கு ஜெய்ஸ்வால் அசத்துவதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் அளவிலான அவருடைய செயல்பாடுகளை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். கடந்த ஐபிஎல் தொடருக்கும் இந்த சீசனுக்கும் அவருடைய வளர்ச்சியை நீங்களே பார்க்கலாம். அவர் இயற்கையாகவே இடைவெளியை பார்த்து அடிக்கும் திறமையை கொண்டுள்ளார்”

- Advertisement -

“குறிப்பாக ஆஃப் சைட் திசையில் அதிரடியாக அடிக்கும் திறமையை கொண்டுள்ள அவர் லெக் சைட் திசையில் அடிக்கும் பலத்தை முன்னேற்றிக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் இந்த சீசனில் அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட்டாகவில்லை என்பது மற்றுமொரு பலமாகும். அதில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது எனக்கு பிடித்துள்ளது. மேலும் அதிகமாக ஸ்டிரைக் எடுக்க விரும்பும் அவர் மீது இப்போது நிறைய எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் உள்ளன. அதை அவர் அபாரமாக கையாண்டு வருகிறார்”

Graeme-Smith

இதையும் படிங்க:IPL 2023 : சிஎஸ்கே அணியில் ப்ராவோவுக்கு மாற்று வீரரா அவர் கிடைச்சுட்டாரு – இளம் வீரரை பாராட்டிய இர்பான் பதான்

“இந்திய அணிக்கான தேர்வு பொறுத்த வரை அவர் தேர்வுக் குழுவினர் கதவை உடைத்து வருகிறார். அதை மட்டும் தான் தற்போது அவரால் செய்ய முடியும். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருடன் இசான் கிசான், சுப்மன் கில் போன்றவர்கள் இருப்பதால் நிறைய தேர்வுகள் தயாராக இருக்கின்றன. ஆனால் அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய அணியை தேர்வு செய்யும் போது தேர்வுக் குழுவினர் ஜெய்ஸ்வால் பெயரை உச்சரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement