- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்சிபி’க்கு இல்ல.. சிராஜ் பதிலடி கொடுத்ததே அவங்களுக்கு தான்.. கம்பேக் கொடுத்து காட்டுங்க.. சேவாக் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடந்த 7 வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த அவர் சமீப வருடங்களாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதன் காரணமாக இந்த வருடம் அவரை பெங்களூரு அணி கழற்றி விட்டதைத் தொடர்ந்து குஜராத் அணி வாங்கியது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று பெங்களூரு அணியை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அதனால் தம்மைக் கழற்றி விட்ட ஆர்சிபி அணிக்கு முதல் போட்டியிலேயே சிராஜ் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு பதிலடி:

இந்நிலையில் உண்மையில் சிராஜ் பெங்களூரு அணிக்கு அல்ல இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிராஜ் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொன்ன இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவரை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் கழற்றி விட்டார். ஆனால் மும்பைக்கு எதிரானப் போட்டியில் ரோஹித் சர்மாவை அதே பந்தில் சிராஜ் போல்டாக்கினார்.

அதே வேகத்தில் இந்தப் போட்டியிலும் புதிய பந்தில் 3 விக்கெட்டுகள் எடுத்த சிராஜ் தமது திறமையை சந்தேகப்பட்ட இந்திய அணிக்கு பதிலடிக் கொடுத்துள்ளதாக சேவாக் கூறியுள்ளார். இதே வேகத்தில் சிராஜ் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிராஜ் சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் தனது ரெக்கார்டை தொடர்ந்தார்”

- Advertisement -

கம்பேக் கொடுங்க:

“தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 – 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார்”

இதையும் படிங்க: 6 ப்ராட்மேன்கள் இருந்தும் சி டீம்’கிட்ட தோத்த பாகிஸ்தான் துரோகம் பண்ணிட்டாங்க.. பேசாம இதை செய்யலாம்.. பசித் அலி விளாசல்

“அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -