பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் மோசமாக தோற்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. ஆனால் அங்கேயும் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணி முகமத் ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடங்கிய பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.
பாகிஸ்தான் திணறல்:
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் டாப் 6 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் போல தங்களுக்கு நினைத்துக் கொண்டு விளையாடுவதாக முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தொடர்ந்து துரோகத்தை செய்யும் தங்களுடைய அணி கடைசிப் போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் எப்படியும் கடைசிப் போட்டியில் விளையாடினாலும் பாகிஸ்தான் தோல்வியே சந்திக்கும் என்று அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணி எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. அவர்கள் எந்த தலைமுறை கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 2வது ஒருநாள் போட்டியில் டேரில் மிட்சேல் அவுட்டான பின் பாகிஸ்தான் வலுவான கம்பேக் கொடுத்தது. ஆனால் அதன் பின் மோசமான கேப்டன்ஷிப் காரணமாக தோல்வியை சந்தித்தோம்”
நாட்டுக்கு திரும்புங்க:
“எனவே இது பாகிஸ்தான் அணி கிடையாது என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும். நமக்காக 1 முதல் 6 வரை விளையாடும் ப்ராட்மேன்களில் டாயப் தாஹிர் தவிர்த்து மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை இழந்தனர். என்னைக் கேட்டால் பாகிஸ்தான் மூன்றாவது போட்டியில் நீங்களே விளையாடிச் வெல்லுங்கள் என்று நியூசிலாந்திடம் சொல்லி விட்டு நாடு திரும்பலாம்”
இதையும் படிங்க: அடுத்தடுத்த தோல்விகள்.. 17 வயது வீரரை டிரையல்ஸ்க்கு அழைத்த சி.எஸ்.கே – யார் இந்த வீரர்?
“ஏனெனில் இது நியூசிலாந்து சி அணி. அந்த அணிக்கு எதிராக நாம் தோற்றுள்ளோம். நாசீம் ஷா விளையாடாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பாகிஸ்தான் குறைந்தது 200+ ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் நாம் 140 ரன்கள் மட்டுமே அடித்து மூட்டையைக் கட்டினோம்” என்று கூறினார். இதைப் தொடர்ந்து இந்தத் தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறுகிறது.



