- Advertisement -
ஐ.பி.எல்

அம்பயரும் தானே காசு வாங்குறாங்க.. கொஞ்சம் வெய்ட் பண்ணா என்ன? இஷான் கிஷான் தவறை கலாய்த்த சேவாக்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 41வது போட்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை மும்பை 7 வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 5 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசம் செய்து வருகிறது.

மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த ஹைதராபாத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தடுமாறி வருகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் ஹைதராபாத் வீரர் இசான் கிசான் அவுட்டான விதம் சிரிப்பை உண்டாக்குவதாக அமைந்தது. ஏனெனில் தீபக் சஹர் வீசிய ஒயிட் போன்ற பந்தில் எட்ஜ் கொடுத்ததாக நினைத்த அவர் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.

- Advertisement -

இஷான் கிசான் பரிதாபம்:

மறுபுறம் களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தார். இறுதியில் அம்பயர் அவுட் கொடுக்காவிட்டால் என்ன? நான் நேர்மையுடன் வெளியேறுகிறேன் என்ற வகையில் இஷான் கிசான் பெவிலியன் நோக்கி சென்றார். அதன் காரணமாக அம்பயரும் கையை உயர்த்தி அவுட் வழங்கியது ரசிகர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் ரிப்ளையில் பார்த்த போது இசான் கிசான் எட்ஜ் கொடுக்காதது அப்பட்டமாக தெரிந்தது. இந்நிலையில் அந்தத் தருணத்தில் இசான் கிசான் மூளை மங்கியது போல நடந்து கொண்டதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். மேலும் நடுவர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தான் வேலை செய்வதாக சேவாக் கூறியுள்ளார். எனவே அவுட் என்று உறுதியாக தெரியாத சமயத்தில் இஷான் கிசான் அம்பயர் தீர்ப்பு கொடுக்கும் வரை காத்திருந்தால் விக்கெட்டை இழந்திருக்க மாட்டார் என்று சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:

இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் சேவாக் கிண்டல் செய்யும் வகையில் பேசியது பின்வருமாறு. “நிறைய நேரங்களில் மனம் நிகழ்காலத்தில் வேலை செய்யத் தவறி விடும். அது மூளை மங்கியது போன்றத் தருணத்தை உண்டாக்கும். அது போன்ற சூழ்நிலையில் குறைந்தபட்சம் நீங்கள் அம்பயர் தீர்ப்பு கொடுக்கும் வரை நிற்க வேண்டும். ஏனெனில் அவரும் தன்னுடைய வேலையை செய்வதற்காக பணம் வாங்குகிறார்”

இதையும் படிங்க: 205 ரன்ஸ்.. கிறிஸ் கெய்லை முந்தி கிங் கோலி 2வது 50 ரன்ஸ் உலக சாதனை.. ராஜஸ்தானை பந்தாடிய ஆர்சிபி

“எனவே அவரை வேலை செய்ய விடுங்கள். ஒருவேளை அங்கே எட்ஜ் கொடுக்கப்பட்டிருந்தால் நீங்கள் நேர்மையுடன் பெவிலியன் திரும்பினீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இஷான் கிசான் அவுட்டும் கிடையாது. அம்பயரும் உறுதியாக தெரியாமல் நின்றார். அந்த சூழ்நிலையில் இசான் கிசான் திடீரென நடையைக் கட்ட தொடங்கியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
என்று கூறினார்.

- Advertisement -