
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அது போக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் இந்த தோல்விக்கு சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக புனே மற்றும் மும்பையில் சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளங்களில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள். அதிலும் குறிப்பாக மும்பையில் வெறும் 147 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோற்றது.
அந்தளவுக்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் கூட மோசமாக விளையாடினார்கள். இந்நிலையில் இந்தியாவின் ரசிகனாக இருப்பதால் இப்போதும் ரோகித் சர்மா தலைமையிலான அணிக்கு தாம் ஆதாரம் கொடுப்பதாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியிடமிருந்து இது மோசமான செயல்பாடு என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடுவோம் என்று அடம் பிடிக்கும் இந்தியாவின் அணுகுமுறை தேவையில்லாதது என்று அவர் விமர்சித்துள்ளார். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் முன்னேற வேண்டும் என்றும் சேவாக் கூறியுள்ளார். இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.
“ஆதரவாளர்களாக இருக்கும் போது எங்கள் அணியை ஆதரிப்பது இன்றியமையாதது. ஆனால் இது எங்கள் அணியில் இருந்து ஒரு பயங்கரமான செயல்பாடு. சுழலுக்கு எதிராக விளையாடும் திறமைக்கு நிச்சயமாக ஒரு மேம்படுத்தல் தேவை. மேலும் சில பரிசோதனைகள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு நல்லது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத சில சோதனைகளை செய்வது மிகவும் மோசமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சர்பராஸ் கான் விடயத்தில் ரோஹித் மற்றும் கம்பீர் எடுத்த முடிவு தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்
அதே சமயம் முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்த நியூசிலாந்து அணிக்கு சேவாக் மனதார வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அணுகு முறையை பின்பற்றுகிறார். ஆனால் 5 நாட்கள் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணுகுமுறை தோல்வியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.