ரோஹித் தலைமையில் இது நடக்கலையா? சிஎஸ்கே மாதிரி மும்பையும் செய்யலாம்.. பாண்டியா பற்றி சேவாக் கருத்து

Virender Sehwag 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் இந்த வருடம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்தே மும்பை ரசிகர்கள் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போதாக்குறைக்கு முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது.

- Advertisement -

சேவாக் கருத்து:
அதனால் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தங்களுடைய சொந்த கேப்டன் என்று பாராமல் மும்பை ரசிகர்களே பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இதற்கு முன் 5 போட்டிகளில் தொடர்ந்து மும்பை தோற்றுள்ளதாக விரேந்தர் சேவாக் ரசிகர்களுக்கு நினைவு படுத்தியுள்ளார்.

அதே சமயம் 7 போட்டிகளுக்கு பின் எதிர்பாராத முடிவு கிடைக்காத பட்சத்தில் 2022ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியை போல பாண்டியாவின் மும்பை கேப்டன்ஷிப் மீண்டும் ரோகித்திடம் ஒப்படைக்கப்படலாம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா தலைமையிலும் மும்பை அணி 5 போட்டிகளில் 5 – 0 என்ற கணக்கில் தொடர்ச்சியாக வென்றுள்ளது”

- Advertisement -

“இதற்கு முன் அவர்கள் சாம்பியனாக பிளே ஆஃப் சுற்றில் தோற்றுள்ளனர். எனவே பாண்டியா விஷயத்திலும் மும்பை பொறுமையுடன் இருப்பார்கள். இவையெல்லாம் புள்ளி விவரங்கள். இருப்பினும் இந்த வருடம் 3 போட்டிகளை தாண்டி தோல்வியை சந்தித்தால் அது மும்பை அணி நிர்வாகத்தின் பொறுமையை சோதிக்கும். இதற்கு முன் பஞ்சாப், சென்னை போன்ற 2 – 3 அணிகள் அதை செய்துள்ளன”

இதையும் படிங்க: அவரை மாதிரி தங்கமான பிளேயரை எதுக்கு கழற்றி விட்டா எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி மீது வாட்சன் அதிருப்தி

“குறிப்பாக ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை சென்னை கொடுத்தது. ஆனால் தோனி பின்னர் அதை எடுத்துக் கொண்டார். அது தொடரின் பாதியிலேயே நடைபெற்றது. எனவே 3 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள இந்த நேரத்தில் மும்பை அது போன்ற முடிவை எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது அணிக்கும் நல்ல செய்தியை கொடுக்காது. ஆனால் 7 போட்டிகள் முடிந்த பின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பார்த்து தொடரின் பாதியில் மும்பை முக்கிய முடிவை எடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement