அவர் ஒன்னும் சாதிக்கல, நாங்க தான் அவர லெஜெண்ட்டா மாத்துனோம் – 2011 உ.கோ வெற்றி பற்றி சேவாக் அதிரடி பேட்டி

Virender Ssehwag Gary Kirsten
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா தற்போது முழுவதுமாக தங்கள் நாட்டில் நடத்தும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. அதில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை துவங்கும் இந்தியா சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Sachin

- Advertisement -

முன்னதாக எம்எஸ் தோனி தலைமையில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங் போன்ற அனுபவமிக்க வீரர்களும் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி போன்ற இளம் வீரர்களும் ஒன்றாக இணைந்து லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றில் கொஞ்சம் கூட தடுமாறாமல் 28 வருடங்கள் கழித்து 2011 உலக கோப்பையை சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் வென்று சரித்திரம் படைத்தனர். அந்தத் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் புற்றுநோயை பொருட்படுத்தாமல் அசத்திய யுவராஜ் சிங் முதல் நாக் அவுட் சுற்றில் முக்கிய ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா வரை களமிறங்கிய அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

லெஜெண்ட் கோச்:
அத்துடன் 24 வருடங்களாக இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 6வது முயற்சியில் உலக கோப்பையை வென்ற ஜாம்பவான் சச்சினை தங்களது தோளில் விராட் கோலி போன்ற இளம் வீரர்கள் சுமந்து மரியாதை செலுத்தியது மறக்க முடியாதது. அதை விட சச்சினுக்கு நிகராக பயிற்சியாளராக செயல்பட்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டனையும் இந்திய வீரர்கள் தோள் மீது சுமந்து அன்பை வெளிப்படுத்தினர்.

Kirsten 1

மேலும் அந்த சமயத்தில் இந்தியாவின் வெற்றிக்கு பயிற்சியாளராக இருந்து பின்னணியில் முக்கிய பங்காற்றிய அவர் இந்திய ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சொல்லப்போனால் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற இந்திய பயிற்சியாளர்களை விட அவர் மீண்டும் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஏக்கம் தற்போது ரசிகர்களின் மனதில் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் களத்தில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும் என்று தெரிவிக்கும் விரேந்தர் சேவாக் நாங்கள் தான் 2011 உலகக் கோப்பையை வென்று கேரி கிறிஸ்டனை ஜாம்பவான் பயிற்சியாளராக உருவாக்கியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்தியாவிலிருந்து வெளியே சென்று தென்னாப்பிரிக்கா போன்ற இதர சர்வதேச அணிகளில் பயிற்சியாளராக செயல்பட்டும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதை சுட்டுக்காட்டும் சேவாக் இது பற்றி 2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியீட்டு விழாவில் பேசியது பின்வருமாறு. “வீரர்கள் களமிறங்கும் போது பயிற்சியாளர்களின் பெயர் அவர்களை சார்ந்தது. அதாவது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் பயிற்சியாளர்கள் பாராட்டப்படுவார்கள். நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு சென்றும் தோல்வியை சந்தித்ததால் அனைவரும் விமர்சித்தனர்”

Sehwag

“குறிப்பாக ராகுல் டிராவிட் நல்ல பயிற்சியாளராக இருந்தாலும் போட்டியில் வெற்றியைக் காண்பது வீரர்களின் வேலையாகும். அந்த வகையில் 2011 உலகக் கோப்பையை வென்று நாங்கள் கேரி கிறிஸ்டனை உருவாக்கினோம். அதன் பின் பல அணிகளில் பயிற்சியாளராக செயல்பட்டும் அவரால் 2022 ஐபிஎல் கோப்பையை தவிர்த்து வேறு எதையும் வெல்ல முடியவில்லை. அங்கேயும் அவரை விட ஆஷிஷ் நெஹ்ரா அதிகமாக வேலை செய்கிறார் என்பதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்”

இதையும் படிங்க:பும்ரா, பண்ட் மாதிரி அவரும் காயமடைஞ்சு 2023 உ.கோ ஜெயிக்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு – கபில் தேவ் கவலை

“எனவே என்னைப் பொறுத்த வரை இந்திய பயிற்சியாளர்கள் தங்களுடைய வீரர்களை புத்துணர்ச்சியாக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்து 100% செயல்பாடுகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அது மட்டும் சரியாக நடந்தால் இந்தியா உலக கோப்பையை வெல்வதை நாம் பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement