IPL 2023 : காயம்ன்னு பொய் சொல்லிட்டு வந்துருக்கலாம், நீங்க எதுக்குமே சரிப்பட மாட்டீங்க – பஞ்சாப் அணியை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் வழக்கம் போல நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் சமீபத்திய போட்டிகளில் தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது. குறிப்பாக டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் களமிறங்கிய அந்த அணி 15 ரன்களில் தோற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ரிலீ ரோசவ் 82* (37) பிரிதிவி ஷா 54 (28) என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் டெல்லி 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் பிரப்சிம்ரன் சிங் 22 (19) ரன்கள் எடுத்து மெதுவாகவே விளையாடி பின்னடைவை ஏற்படுத்தினார். அதை விட 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்த்து அமைத்த போதிலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட அதர்வா டைட் 55 (42) ரன்கள் எடுத்தார். அப்போது இனிமேலும் விட்டால் தோல்வியை கொடுத்து விடுவார் என்று கருதிய பஞ்சாப் நிர்வாகம் ரிட்டையர்டு அவுட்டாகி வருமாறு கேட்டுக்கொண்டது.

- Advertisement -

பொய்யான காயம்:
அதனால் அவரும் அணியின் நலன் கருதி 15வது ஓவரின் முடிவில் வெளியேறிய நிலையில் வந்த ஜிதேஷ் சர்மா 6, ஷாருக்கான் 6, சாம் கரண் 11 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் மறுபுறம் வெறியுடன் போராடிய லிவிங்ஸ்டன் 94 (47) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 198/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப்பின் முதல் கோப்பை வெல்லும் கனவு இம்முறையும் தகர்ந்தது.

இந்நிலையில் 42 பந்துகளை எதிர்கொண்டு வெற்றி பறிபோன பின் ரிட்டையர் அவுட்டாகி சென்றதற்கு பதிலாக மும்பைக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் க்ருனால் பாண்டியா காயமென்று பொய் சொல்லியாவது வெளியே சென்றது போல் அதர்வா டைட் வெளியேறியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார். அதே போல் அந்த முடிவில் தாமதமாக செயல்பட்டு பஞ்சாப் அணி நிர்வாகமும் தவறு செய்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்ருமாறு.

- Advertisement -

“நானாக இருந்தால் அவரை முன்கூட்டியே ரிட்டயர் செய்திருப்பேன். ஒருவேளை அவர் 42 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தால் கூட பஞ்சாப் வென்றிருக்கும். மாறாக தடுமாறிய அவரை சற்று முன்கூட்டியே நான் ரிட்டயராக சொல்லியிருப்பேன் அல்லது அவரே பொய்யாக காயம் என்று சொல்லி க்ருனால் பாண்டியா லக்னோவுக்கு செயல்பட்டதை போல் செய்திருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ரிட்டையர்டு ஹர்ட்டாகி செல்லும் போது மீண்டும் தேவைப்படும் நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கலாம். ஆனால் ரிட்டையர் அவுட்டாகி செல்லும் போது மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாது”

“அந்த நிலையில் ஒருவேளை அவர் 42 பந்துகளை எதிர்கொண்ட பின் ரிட்டயர் அவுட்டாகி சென்றதற்கு பதிலாக 36 பந்துகளில் சென்றிருக்க வேண்டும். அது போன்ற நிலைமையில் முன்கூட்டியே வந்து வேறு யாராவது 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் பஞ்சாப் அணியும் தவறாக கணக்கு போட்டு விட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுப்பதையே விரும்புவார்கள். ஆனால் நீங்கள் தடுமாறும் போது உங்களது அணிக்கு உதவுவதற்காக ஓய்வு பெறுவது உங்கள் ஈகோவை காயப்படுத்தக் கூடாது. வேறு ஏதேனும் ஒரு ஆட்டத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனை சமன், ரோஹித் – ராகுலை மிஞ்சி கிங் கோலி படைத்த 6 மாஸ் சாதனைகளின் பட்டியல் இதோ

முன்னதாக 18.50 கோடிக்கு வாங்கிய ஷாம் கரண் எத்தனை வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார் என்பது போல இந்த சீசனில் ஆரம்பம் முதலே தன்னுடைய முன்னாள் அணியான பஞ்சாப்பை சேவாக் சரமாரியாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அதர்வா டைட் விஷயத்தில் கூட சரியாக செயல்படாமல் தப்பு கணக்கு போட்ட பஞ்சாப்பை எதற்குமே சரிப்பட்டு வர மாட்டீர்கள் என்ற வகையில் அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement