IPL 2023 : கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனை சமன், ரோஹித் – ராகுலை மிஞ்சி கிங் கோலி படைத்த 6 மாஸ் சாதனைகளின் பட்டியல் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி சதமடித்து 104 (51) ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை துரத்திய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலிருந்தே நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் – விராட் கோலி ஆகியோர் ஜோடியாக ஹைதராபாத் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அந்த ஜோடியை முன்கூட்டியே உடைப்பதற்கு ஹைதராபாத் போட்ட அனைத்து திட்டங்களையும் உடைத்து 172 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த அவர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 100 (63) ரன்களும் டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (47) ரன்கள் குவித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

சாதனை பட்டியல்:
அதனால் 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமான வெற்றி பெற்ற பெங்களூரு தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளது. குறிப்பாக வாழ்வா – சாவா என்ற வகையில் அமைந்த இந்த போட்டியில் பெங்களூருவின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தன்னுடைய கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றி பெற வைத்தார்.

அதிலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் கடந்த சீசனில் அடுத்தடுத்து கோல்டன் அவுட்டாகி சந்தித்த விமர்சனங்களை இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு உடைத்து வந்த அவர் இப்போட்டியில் சதமடித்து சுக்குநூறாக உடைத்து தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். பொதுவாக விராட் கோலி விளையாடினாலே சாதனைகள் இல்லாமல் இருக்குமா என்பது போல் இந்த போட்டியில் அவர் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. இந்த சதத்தையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில்/விராட் கோலி : தலா 6
2. ஜோஸ் பட்லர் : 5

2. அதை விட அந்த 6 சதங்களையும் பெங்களூரு அணிக்காக மட்டுமே அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 6, பெங்களூருவுக்காக
2. கிறிஸ் கெயில் : 5, பெங்களூருவுக்காக (1 பஞ்சாப்புக்காக)
3. ஜோஸ் பட்லர் : 5, ராஜஸ்தானுக்காக

- Advertisement -

3. அத்துடன் சர்வதேசம் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் ராகுல் சாதனை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 7*
2. ரோகித் சர்மா : 6
3. கேஎல் ராகுல் : 6

4. அதை விட ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், பால் வல்தாட்டி, தேவ்தூத் படிக்கல், அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான் ஆகியோர் தலா 1 சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இதையும் படிங்க:SRH vs RCB : உழைச்சு ஜெயிங்க – ஹைதெராபாத்தில் மாஸ் காட்டிய கிங் கோலி – சிஎஸ்கே’வை வெய்ட் பண்ண வைத்த ஆர்சிபி

5. மேலும் 2011, 2013, 2015, 2016, 2018, 2023* ஆகிய 6 சீசன்களில் முறையே 557, 634, 505, 973, 530, 538* என 500க்கும் மேற்பட்ட ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 500+ ரன்கள் அடித்த இந்திய வீரர் (6) என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் கேஎல் 5 முறை மட்டுமே அடித்துள்ளார்.

6. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சிக்ஸருடன் சதமடித்த வீரர் (3) என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஹாசிம் அம்லா 2 முறை சிக்ஸருடன் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement