தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தையை மட்டும் கேளுங்க. கப் நமக்கு தான் – சேவாக் அளித்த சுவாரசிய பேட்டி

Sehwag-and-Rohit
- Advertisement -

இந்திய அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரினை தோனி தலைமையில் வென்று அசத்தியது. இலங்கை அணிக்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த முக்கியமான இறுதி போட்டியில் சிக்ஸருடன் தோனி வெற்றிக்கு அழைத்துச் சென்று கபில் தேவிற்கு அடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டாலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பினை இழந்தது.

அதனை தொடர்ந்து இம்முறை இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று பலரும் கூறி வருவதாலும் அதோடு பலம் வாய்ந்த வீரர்கள் நமது அணியில் இருப்பதாலும் நிச்சயம் இம்முறை இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல தோனி பின்பற்றிய ஒரு சில யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : தோனி எப்பொழுதுமே ஒரு விடயத்தை தான் வீரர்களிடம் சொல்வார். பிராசஸில் மட்டும் கவனமாக இருங்கள் முடிவுகளைப் பற்றி யோசிக்க வேண்டாம். நம்முடைய செயல்பாடு நன்றாக இருந்தால் அதற்கான முடிவுகள் தானாக கிடைக்கும் என்று கூறுவார்.

- Advertisement -

அதேபோன்று நாங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடும்போது அனைவருமே சேர்ந்து எடுத்த முடிவு ஒன்றுதான் : செய்தித்தாள்களை பார்க்க கூடாது. வெளியில் இருந்து வரும் கருத்துக்களுக்கு செவி கொடுக்க கூடாது. சமூக வலைதளத்தில் நாட்டத்தை செலுத்தக் கூடாது. நம்முடைய வேலை கிரிக்கெட்டில் மட்டும் தான் எனவே அதற்கான பயிற்சிகளை எடுத்து நம்முடைய செயல்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இதை பின்பற்றியதாலே எங்களால் அந்த பெரிய தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது.

இதையும் படிங்க : அன்று இந்தியாவை ஏளனமா பேசுன உங்களுக்கா இப்படி ஒரு நிலைம.. முன்னாள் பாகிஸ்தான் வீரரை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

கேரி கிறிஸ்டன் மற்றும் தோனி ஆகிய இருவரும் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல்பாட்டில் மட்டுமே தங்களது கவனத்தை செலுத்த வீரர்களை அறிவுறுத்தினர். அதனாலே இந்திய அணி அந்த கோப்பையை வென்றது. அதே போன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் எதிர்வரும் ஒன்றரை மாதங்கள் வெளியிலிருந்து வரும் எந்த கருத்துக்களுக்கும் செவி சாய்க்காமல் செயல்பாட்டில் மட்டும் கவனமாக இருந்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement