அன்று இந்தியாவை ஏளனமா பேசுன உங்களுக்கா இப்படி ஒரு நிலைம.. முன்னாள் பாகிஸ்தான் வீரரை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

Ramiz Raza.jpeg
- Advertisement -

இந்தியாவில் ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெற உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அந்த சூழ்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 2016 டி20 உலகக் கோப்பைக்கு பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். முன்னதாக எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் முழுமையாக நடைபெறவிருந்த 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தார்.

- Advertisement -

அவருக்கா இந்த நிலைமை:
அதற்கு எங்கள் நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று அப்போதைய பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அதை விட அந்த சமயத்தில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த பாகிஸ்தான் ஒருவேளை அத்தொடரை புறக்கணித்தால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை யார் பார்ப்பார்? என்றும் அவர் ஏளனமாக பேசினார்.

ஆனால் அதன் பின் பாகிஸ்தான் வாரியத்தில் நிகழ்ந்த அதிரடியான மாற்றத்தால் இரவோடு இரவாக ரமீஸ் ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டு நஜாம் சேதி பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடும் பெரும்பாலான ஆசிய கோப்பை போட்டிகளை அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் எஞ்சிய போட்டிகளை இலங்கையிலும் நடத்தும் ஆசிய கவுன்சிலின் முடிவுக்கு நஜாம் சேதி சம்மதமும் தெரிவித்தார்.

- Advertisement -

மறுபுறம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ரமீஸ் ராஜா மீண்டும் தம்முடைய யூடியூப் பக்கத்தின் வருமானத்திற்காக “சொந்த மண்ணில் எப்படி வெல்ல வேண்டும் என்பதை இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கட்சி மாறி பேச தொடங்கினார். அதற்கிடையே நஜாம் சேதியும் பதவி நீக்கப்பட்டு தற்போது ஜாகா அஸ்ரப் புதிய பாகிஸ்தான் வாரிய தலைவராக இருக்கும் நிலையில் ஆசிய கோப்பையும் நிறைவு பெற்று பாகிஸ்தானும் உலக கோப்பைக்காக இந்தியா வந்துள்ளது.

ஆனால் தற்போது இந்தியாவுக்கு வர மாட்டோம் என்ற அடம் பிடித்த ரமீஸ் ராஜா 2023 உலகக்கோப்பையில் வர்ணனையாளராக செயல்படுவதற்கு வந்துள்ளார். குறிப்பாக செப்டம்பர் 29ஆம் தேதி ஹைதெராபாத் நகரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி போட்டியில் அவர் சுனில் கவாஸ்கரின் அருகே நின்று வர்ணனை செய்தார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் இவருக்காக இப்படி ஒரு நிலைமை என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement