200% ரிஸ்க் எடுப்பேன், தற்போதைய இந்திய அணியில் அந்த எண்ணத்துடன் என்னை போல எந்த ப்ளேயரும் இல்ல – சேவாக் ஆதங்கம்

Sehwag
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தன்னுடைய அதிரடியான சரவெடியான பேட்டிங்கால் ஆரம்பத்திலேயே எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் பந்தாடி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எப்பேர்பட்ட தரமான பவுலர் வீசினாலும் முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விடும் அவர் அதிரடியான தொடக்கத்தை கொடுக்கும் ஸ்டைலை கொண்டிருந்தார். அத்துடன் உலகில் 90 ரன்கள் தொட்டதும் எப்படியாவது 100 ரன்களை அடிக்க வேண்டும் என்ற என்ற பதட்டத்துடன் சிங்கிள், டபுள் எடுத்து சதமடிக்கும் வீரர்களுக்கு மத்தியில் 90, 190, 190 என எந்த வகையான சதமாக இருந்தாலும் அதை சுயநலமின்றி பயப்படாமல் பவுண்டரி அல்லது சிக்சரை பறக்க விட்டு தொடுவதில் அவருக்கு நிகர் யாரும் கிடையாது எனலாம்.

Sehwag

- Advertisement -

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான இலக்கணத்தை கற்பித்த அவர் தனித்துவமாக செயல்பட்ட காரணத்தாலேயே சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோராலும் முடியாத முச்சதத்தை தொட்ட முதல் இந்திய வீரராக சாதனை படைத்து அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் (319) பதிவு செய்த இந்திய வீரராகவும் வரலாறு படைத்துள்ளார். அப்படி மகத்தான அவருடன் ஒப்பிடும் வகையில் நவீன கிரிக்கெட்டில் சில செயல்பட்டாலும் யாராலும் அவரை போல் தொடர்ச்சியாக அதிரடியாக செயல்பட முடியவில்லை.

சேவாக் ஆதங்கம்:
குறிப்பாக அதே டெல்லியை சேர்ந்த பிரிதிவி ஷா குட்டி சேவாக் என்று ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் தற்போது இந்திய அணியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ரன்கள் அடித்ததும் 200, 300 ரன்களாக மாற்ற வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்துடன் இப்போது இந்திய அணியில் எந்த வீரர்களும் விளையாடவில்லை என்று சேவாக் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Sehwag

மேலும் 90 ரன்களில் இருக்கும் போது அவுட்டானாலும் பரவாயில்லை என்று 200% ரிஸ்க் எடுத்து பவுண்டரியுடன் சதத்தை தொடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிவிக்கும் அவர் தம்மை போல் அதிரடியாக செயல்படும் திறமை கொண்ட பிரிதிவி ஷா, ரிஷப் பண்ட் 100 ரன்கள் அடித்ததும் திருப்தியடைந்து விடுவது ஏமாற்றத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய இந்திய அணியில் எந்த வீரரும் என்னைப்போல் பேட்டிங் செய்வதாக நான் நினைக்கவில்லை. பிரிதிவி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 வீரர்கள் அந்த இடத்தில் இருப்பதாக எனது மனதில் தோன்றுகிறார்கள்”

- Advertisement -

“குறிப்பாக ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட என்னை நெருங்கி என்னை போலவே பேட்டிங் செய்கிறார். இருப்பினும் அவர் 90 – 100 அடித்ததும் திருப்தியடைந்து விடுகிறார். ஆனால் நான் எப்போதும் 100 ரன்களை கடந்தாலும் 200, 250, 300 ரன்களை அடிப்பேன். எனவே அவர் தன்னுடைய விளையாட்டை இந்த கோணத்தில் எடுத்துச் சென்றால் ரசிகர்களையும் அதிகமாக மகிழ்ச்சியடைய வைக்கலாம். ஆரம்ப காலங்களில் நான் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிய காரணத்தாலேயே பவுண்டரி வாயிலாக அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற மனநிலையை கொண்டிருந்தேன்”

sehwag

“சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் அதே அணுகுமுறையுடன் தான் விளையாடினேன். அதாவது சதமடிக்க எத்தனை பவுண்டரி தேவை என்பதை நான் கணக்கிடுவேன். ஒருவேளை நான் 90 ரன்களில் இருக்கும் பட்சத்தில் 100 ரன்களை அடுத்த 10 பந்துக்குள் எடுக்க முயற்சிப்பேன். அதே போல் எதிரணியும் என்னை அவுட்டாக்க அந்த 10 பந்துகளை எடுத்துக் கொள்வார்கள்”

இதையும் படிங்க:IND vs AUS : கடைசி போட்டியில் சூரியகுமார் யாதவிற்கு பதிலா அவருக்கு வாய்ப்பு குடுக்கலாம் – வாசிம் ஜாபர் பேட்டி

“அதன் காரணமாகத்தான் நான் பவுண்டரிகளால் சதமடிக்க முயற்சித்து எதிரணி என்னை அவுட்டாக்குவதற்கு 2 பந்துகள் மட்டுமே வாய்ப்பு வழங்குவேன். ஆனால் இந்த வகையில் சதமடிக்கும் போது உங்களுடைய ரிஸ்க் சதவீதம் 100லிருந்து 200 சதவீதமாக அதிகரித்து விடும்” என்று கூறினார்.

Advertisement