IND vs AUS : கடைசி போட்டியில் சூரியகுமார் யாதவிற்கு பதிலா அவருக்கு வாய்ப்பு குடுக்கலாம் – வாசிம் ஜாபர் பேட்டி

Wasim-Jaffer-and-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிப்பதால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Starc

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வந்த வேகத்திலேயே டக் அவுட்டான சூரியகுமார் யாதவிற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது.

Sanju Samson

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் நிச்சயம் அது தவறான ஆப்ஷனாக அமையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் மூன்றாவது போட்டியில் சூரியகுமார் யாதவுக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது. ஆனாலும் என்னை பொருத்தவரை சஞ்சு சாம்சனை அணியில் இணைத்து அவரை விளையாட வைக்கலாம் அந்த முடிவு தவறாக அமையாது என வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எதைப்பத்தியும் யோசிக்காதே. இதில் மட்டும் கவனம் செலுத்து. உம்ரான் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுத்த – இஷாந்த் சர்மா

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : சூரியகுமார் யாதவிற்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளதால் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement