எதைப்பத்தியும் யோசிக்காதே. இதில் மட்டும் கவனம் செலுத்து. உம்ரான் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுத்த – இஷாந்த் சர்மா

Ishanth-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் எல்லா காலகட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என பலரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர் இதுவரை கிடைத்ததில்லை. அந்த வகையில் அந்த குறையை தீர்க்கும் விதமாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு கிடைத்தார், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக மாற்று வீரராக களமிறங்கிய அவர் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Umran Malik

- Advertisement -

ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான பவுலிங்கால் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறவைத்த அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை 8 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசம் இவரை உலக கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ கூட கூறியிருந்தார்.

umran

வேகமாக பந்துவீசும் உம்ரான் மாலிக் லைன் மற்றும் லென்த்தை பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கூறி வரும் வேளையில் ரன் போவதை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியோ யோசிக்காமல் தொடர்ந்து அதிவேகத்தில் பந்து வீச வேண்டும் என இஷாந்த் சர்மா அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

உம்ரான் மாலிக்-கால் 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச முடிகிறது. இப்படி அவரது திறன் இயல்பாகவே இருப்பதினால் அதனை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நிச்சயம் அவர் அதிவேகத்திலேயே பந்து வீசலாம். ரன் போவதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரது வேகத்தின் மீது நம்பிக்கை வைத்து மிகவும் வேகமாக வீச வேண்டும்.

இதையும் படிங்க : WTC பைனல் : விக்கெட் கீப்பர்னா இலக்காரமா? உங்க பேச்சை கேட்டா தோல்வி தான் கிடைக்கும் – கவாஸ்கர், சாஸ்திரிக்கு கம்பீர் பதிலடி

அதிவேகத்தில் பந்து வீசும் ஒரு பவுலர் நம் அணியில் இருந்தால் நிச்சயம் எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணற வைக்க முடியும். என்னை பொறுத்தவரை உம்ரான் மாலிக்-கால் நிச்சயம் கிரிக்கெட்டில் பெரிய வீரராக மாறும் திறன் இருக்கிறது என்றே தெரிகிறது. எனவே அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேகத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement