WTC பைனல் : விக்கெட் கீப்பர்னா இலக்காரமா? உங்க பேச்சை கேட்டா தோல்வி தான் கிடைக்கும் – கவாஸ்கர், சாஸ்திரிக்கு கம்பீர் பதிலடி

Gautam Gambhir
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 – 11 வரை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் குறிப்பாக கடந்த ஃபைனலில் சொதப்பி நியூசிலாந்திடம் கோட்டை விட்ட கோப்பையை இம்முறை எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு வைக்கப் போராட காத்திருக்கும் இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியுள்ளது ஆரம்பத்திலேயே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

KS Bharat 1

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் 2 சதங்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பராக தோனியால் முடியாத சாதனையை படைத்த ரிஷப் பண்ட் விளையாடாதது பெரிய பின்னடைவாக மாறியுள்ள நிலையில் அவரது இடத்தில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் இந்திய மைதானங்களிலேயே சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

மறுபுறம் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் 2018இல் லண்டன் ஓவல் மைதானத்திலும் 2021இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் சதமடித்த அனுபவத்தை கொண்ட கேஎல் ராகுல் தற்போது ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவதால் இந்த ஃபைனலில் கேஎஸ் பரத்துக்கு பதிலாக விளையாடுவது இந்திய பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Dinesh-Karthik-and-KL-Rahul

கம்பீர் பதிலடி:
மேலும் சுழலுக்கு சாதகமில்லாத இங்கிலாந்து மைதானங்களில் பெரிய அளவில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான வேலையும் இருக்காது என்பதால் ராகுல் கண்டிப்பாக ஃபைனலில் இருக்க வேண்டுமென தினேஷ் கார்த்திக் போன்ற சில முன்னாள் வீரர்களும் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் ராகுல் போன்ற பகுதி நேர விக்கெட் கீப்பருக்கு பதிலாக முழு நேர விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்து சூழ்நிலையில் பந்து நிறைய திரும்பி வரும் என்பதால் விக்கெட் கீப்பர் இடத்தை சாதாரணமாக நினைக்காமல் அதில் தேர்ந்தவர் விளையாட வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அவர் ஒரு கேட்ச்சை தவற விட்டால் கூட வெற்றி பறிபோய் விடும் என்று எச்சரித்துள்ளார். அதே சமயம் வேண்டுமானால் கேஎல் ராகுலை பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுமாறு இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Gambhir

“இங்கிலாந்து கீப்பிங் செய்வதற்கு கடினமான இடம் என்பதால் நீங்கள் பகுதி நேர விக்கெட் கீப்பருக்கு பதிலாக ஸ்பெஷல் விக்கெட் கீப்பருடன் செல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுலை விளையாட விரும்பினால் அவரை பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுங்கள். அத்துடன் 4 போட்டிகளின் முடிவில் கேஎஸ் பரத் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் சுமாராக இருப்பதாக நாம் முடிவுக்கு வந்து விட்டோம். ஆனால் அந்த 4 போட்டிகளில் நம்முடைய டாப் ஆர்டரில் நிறைய நட்சத்திர தரமான பேட்ஸ்மேன்கள் சொதப்பியத்தையும் மனதில் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மேலும் பரத் மீது கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள் தங்களது சொந்த சாதனைகளை திரும்பி பார்க்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் முழுமையான விக்கெட் கீப்பருடன் விளையாட வேண்டும். ஒரு விக்கெட் கீப்பர் சில கேட்ச்களை தவற விடலாம் ஆனால் அவரால் அதே போட்டியில் நிறைய அற்புதமான கேட்ச்களையும் பிடிக்க முடியும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர்கள் விக்கெட் கீப்பிங் செய்வதன் அருமையை உணர வேண்டும். ஏனெனில் ஒரு கேட்ச்சை தவற விட்டாலும் அது அந்தப் போட்டியின் வெற்றியை மாற்றி விடும்”

இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த ஒயிட் பால் பவுலர் இவர்தான். பும்ரா இல்லை – நேரடியாக தெரிவித்த தினேஷ் கார்த்திக்

“ஒருவேளை முழு நேர விக்கெட் கீப்பர் ஒரு கேட்ச்சை தவற விட்டால் நீங்கள் எதுவும் நினைக்க மாட்டீர்கள். ஆனால் பகுதி நேர விக்கெட் கீப்பர் ஒரு கேட்ச்சை தவற விட்டால் அதுவே அந்த போட்டியின் 5 நாட்களும் பேசாமல் ஒரு முழு நேர விக்கெட் கீப்பருடன் விளையாடியுருக்கலாம் என்ற கவலையை உங்களிடம் ஏற்படுத்தி விடும்” என்று கூறினார்.

Advertisement