உலகின் தலைசிறந்த ஒயிட் பால் பவுலர் இவர்தான். பும்ரா இல்லை – நேரடியாக தெரிவித்த தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 117 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 11 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mitchell Marsh 1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் திகழ்ந்தார். ஏனெனில் நேற்றைய போட்டியில் துவக்கத்திலிருந்தே இந்திய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டம் இழக்க வைத்த அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதாவது முறையாக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அவரது பந்துவீச்சில் சுப்மன் கில், ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், கே.எல் ராகுல் மற்றும் சிராஜ் என ஐந்து வீரர்கள் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாகவே இந்திய அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பவுலர் யார் என்ற விவாதம் சமூக வலைதளத்தில் எழும்பியது.

Starc 1

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தான் மிகச்சிறந்த பவுலர்கள் என்ற பேச்சு இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் இருவருக்கும் சவால் விடும் வகையில் மிட்சல் ஸ்டார்க்கும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : உலகின் தலைசிறந்த பவுலர் தற்போது மிட்சல் ஸ்டார்க் தான். ஏனெனில் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அவர் இரண்டு முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். அவ்வப்போது காயத்தை சந்தித்து வரும் அவர் பல போட்டிகளை தவறவிட்டாலும் எப்போது விளையாடினாலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை அவர் வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : WTC ஃபைனல் : அதை கரெக்ட்டா செஞ்சா ஆஸி என்ன பண்ணாலும் கோப்பை நமக்கு தான் – இந்தியாவின் வெற்றி பற்றி சச்சின் பேட்டி

அந்த வகையில் மிட்சல் ஸ்டார்க் தான் தற்போதைய உலகின் தலைசிறந்த பவுலராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement