WTC ஃபைனல் : அதை கரெக்ட்டா செஞ்சா ஆஸி என்ன பண்ணாலும் கோப்பை நமக்கு தான் – இந்தியாவின் வெற்றி பற்றி சச்சின் பேட்டி

Sachin
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பட்ரீசை நடத்த உள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த ஃபைனலை பொறுத்த வரை கிட்டத்தட்ட தங்களது சொந்த மண்ணில் நிலவும் கால சூழ்நிலைகளே இங்கிலாந்தில் நிலவும் என்பதால் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் போன்ற டாப் பேட்ஸ்மேன்களையும் ஸ்டார்க், பட் கமின்ஸ், ஹேசல்வுட் போன்ற அதிரடியான வேகத்தில் பந்து வீசும் பவுலர்களையும் கொண்ட ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்திய அணியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷமி போன்ற தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய 2 முக்கிய கருப்பு குதிரை வீரர்கள் காயத்தால் விலகியுள்ளது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சச்சின் ஆலோசனை:
எனவே அவர்களது இடத்தை நிரப்பப்போவது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணி எப்போதுமே வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தடுமாறுவது வழக்கமாகும். அதனால் தரமும் திறமையும் இருந்தும் சரியாக திட்டமிட்டு மீண்டும் சொதப்பாமல் கச்சிதமாக விளையாடினால் தான் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா இருக்கிறது.

wtc ind

இந்நிலையில் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்து மண்ணில் நிலவும் கால சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் சரியான 11 பேர் அணியை தேர்வு செய்தாலே இருக்கும் திறமைக்கும் தரத்திற்கும் எதிரணியான ஆஸ்திரேலியா என்ன செய்தாலும் இந்தியா நிச்சயம் ஃபைனலில் வெல்ல முடியும் என்று சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு முதலில் நீங்கள் போட்டி நடைபெறும் அடுத்த 5 நாட்களின் கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கேற்றார் போல் சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். மேலும் இங்கிலாந்து சூழ்நிலைகளில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் இருப்பது சமமான அணியை உருவாக்குவதில் கேப்டனுக்கு சவாலை ஏற்படுத்தும். இவை அனைத்தையும் நான் இந்திய அணியின் கோணத்திலிருந்து தான் பார்த்து சொல்கிறேன். மறுபுறம் ஆஸ்திரேலியர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை தாராளமாக செய்ய விடுங்கள். ஆனால் அதை நாம் சரியாக செய்தால் நாம் வெற்றியின் சரியான பக்கத்தில் நிற்போம்” என்று கூறினார்.

sachin

அவர் கூறுவது போல கடந்த ஃபைனலில் ஒருநாள் முன்பாகவே 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதாக இந்தியா தைரியமாக அறிவித்தது. ஆனால் ஃபைனல் துவங்கிய நாளிலிருந்து திடீரென்று சௌதம்டன் மைதானத்தில் அவ்வப்போது மழை வந்து ஈரப்பதமான சூழ்நிலை நிலவியதால் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர்.

- Advertisement -

அதன் காரணமாக 2 ஸ்பின்னர்களுடன் விளையாடிய இந்தியாவின் தேர்வு தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் அஷ்வின் ஓரளவு அசத்தலாக செயல்பட்டு 2 இன்னிங்ஸிலும் விக்கெட்டுகளை எடுத்த நிலையில் சுமாராக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிக ஓவர்களை வழங்க முடியாத அளவுக்கு கேப்டன் விராட் கோலி தடுமாறினார்.

Kohli

இதையும் படிங்க:வீடியோ : இலங்கையை துவம்சம் செய்த நியூஸிலாந்து – வெலிங்டனில் நிகழ்ந்த 2 வித்யாச வினோத நிகழ்வால் ரசிகர்கள் வியப்பு

எனவே இம்முறை 3 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள், 4வது வேப்பந்து வீச்சாளராக ஆல் ரவுண்டர், 1 ஸ்பின்னர் என்ற அடிப்படையில் பந்து வீச்சு கூட்டணியுடன் களமிறங்க வேண்டியுள்ள இந்திய அணியில் அதற்கான தரமான வீரர்களை தேர்வு செய்ய வேண்டியது ரோகித் சர்மாவின் கையில் உள்ளது.

Advertisement