வீடியோ : இலங்கையை துவம்சம் செய்த நியூஸிலாந்து – வெலிங்டனில் நிகழ்ந்த 2 வித்யாச வினோத நிகழ்வால் ரசிகர்கள் வியப்பு

Newzealand
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இலங்கை முதல் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. மறுபுறம் நடப்பு டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை இழந்தும் சொந்த மண்ணில் போராடி சிறப்பான வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் அகமதாபாத் போட்டி ட்ராவில் முடிந்தும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஆஸ்திரேலியாவுடன் மோதுவதற்கு இந்தியா தகுதி பெற்றது இலங்கையின் வாய்ப்புகளை உடைத்தது. அந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அபாரமாக பேட்டிங் செய்து இலங்கை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 580/4 ரன்கள் குவித்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்து 23 பவுண்டரி 2 சிக்சருடன் 215 ரன்களும் ஹென்றி நிக்கோலஸ் 15 பவுண்டரி 4 சிக்சருடன் 200* ரன்களும் குவிக்க பரிதாபமாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வினோத நிகழ்வுகள்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நல்ல ஈரப்பதத்துடன் குளிர்ந்த காற்று வீசிய வெலிங்டன் மைதானத்தில் நியூஸிலாந்தின் தரமான ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கருணரத்னே போராடி 9 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் மாட் ஹென்றி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து நியூஸிலாந்து பாலோ ஆன் கொடுத்ததால் 416 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை முடிந்த அளவுக்கு போராடியும் 358 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் போராடிய தனஞ்செயா டீ சில்வா சதத்தை நெருங்கியும் 98 ரன்களிலும் கருணரத்னே 51 ரன்களும் குசால் மெண்டிஸ் 50 ரன்களும் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ மற்றும் ப்ளாக் டிக்னர் தலா 3 விக்கட்டுகளை சாய்த்தனர். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 0 (2) என்ற கணக்கில் இலங்கையை ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.

- Advertisement -

அந்த நிலையில் பொதுவாகவே நியூசிலாந்தில் சற்று அதிகப்படியான வேகத்துடன் காற்று அடிப்பது வழக்கமான நிலையில் இப்போட்டி நடைபெற்ற வெலிங்டன் மைதானத்தில் மார்ச் 20ஆம் தேதியன்று நடந்த 4வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவெளிக்கு பின் அதிகப்படியான காற்று வீசியது. போதாக்குறைக்கு போட்டி நடைபெற்ற பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானம் திறந்த வெளியாக இருக்கும் காரணத்தால் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக பவுலர்கள் பந்து வீசும் ஒரு திசையில் பின்புறத்தில் உயர்வு பெற கோபுரங்கள் அமைத்து போட்டியை நேரலையாக படம் பிடித்து வந்த கேமராமேன்கள் தொடர்ந்து துல்லியமாக படம் பிடிக்க முடியாத அளவுக்கு காற்று பலமாக வீசியது. அதன் காரணமாக பெவிலியன் இல்லாமல் அதிகத் திறந்த வெளியுடன் பின்புறத்தில் மரங்கள் இருக்கும் அடிலெய்ட் ரோட் திசையில் படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன்கள் மேற்கொண்டு தங்களுக்கு வேலையில் செய்ய முடியாமல் பாதிலேயே கீழே இறங்கினார்கள்.

- Advertisement -

அதனால் ஒரு கட்டத்தில் அந்த போட்டி ஒரு கோணத்தில் இருந்து மட்டும் ஒளிபரப்பப்பட்டது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை விட மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 121 ஓவரின் ஒரு பந்து கையில் இருந்து விட்டபின் காற்றில் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் பிட்ச் வரையறுக்கப்பட்டிருக்கும் கடைசி வெள்ளை கோட்டை தாண்டி தரையில் பட்டது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 : கப் ஜெயிக்க வேண்டாம் ஃப்ரீயா விளையாடுங்கன்னு சொன்ன அந்த டீம் வேற லெவல் – ஹர்பஜன் சிங் பாராட்டு

அதை விக்கெட் கீப்பர் கச்சிதமாக பிடித்தும் பிட்ச்சுக்கு வெளியே வந்து சென்றதால் நடுவர் ஒய்ட் வழங்கினார். முன்னதாக நியூசிலாந்தின் சூரிய வெளிச்சத்தால் போட்டி நடைபெற்ற வரலாறு உள்ள நிலையில் அதிகப்படியான காற்றால் நிகழ்ந்த இந்த 2 வினோத நிகழ்வுகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement