ஐபிஎல் 2023 : கப் ஜெயிக்க வேண்டாம் ஃப்ரீயா விளையாடுங்கன்னு சொன்ன அந்த டீம் வேற லெவல் – ஹர்பஜன் சிங் பாராட்டு

Harbhajan-singh
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 16 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. மும்பைக்கு அடுத்தபடியாக 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை இதுவரை நடைபெற்ற 15 வருடங்களில் 13 சீசன்களில் விளையாடி அதில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இதர அணிகளை காட்டிலும் ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அணியாக போற்றப்படுகிறது.

csk

- Advertisement -

மேலும் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்தது போலவே சென்னை அணிக்காகவும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகள் போன்ற நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் தோனி கிரிக்கெட்டின் அதிக அனுபவத்தை கொண்ட கேப்டனாக போற்றப்படுகிறார். அதன் காரணமாக அவர் தலைமையில் விளையாடுவதற்கு இந்தியா மட்டுமல்லாது பல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

சிறப்பான டீம்:
ஏனெனில் தனது அனுபவத்தால் தடுமாறும் வீரர்களையும் வெற்றிகரமாக செயல்பட வைக்கும் மேஜிக் தோனியிடம் இருப்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதற்கு பெங்களூரு உள்ளிட்ட இதர அணிகளில் தடுமாறிய ஷேன் வாட்சன், மொய்ன் அலி உள்ளிட்ட நிறைய வீரர்கள் சென்னை அணிக்கு வந்ததும் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அத்துடன் ட்வயன் ப்ராவோ, டு பிளேஸிஸ் போன்ற நிறைய வெளிநாட்டு வீரர்கள் தங்களது கேரியரில் பெரிய அளவில் வருவதற்கு தோனியின் ஆலோசனைகள் உதவியதாக சமீப காலங்களில் தெரிவித்துள்ளனர்.

Harbhajan

அப்படி மிகச் சிறந்த கேப்டனாக திகழும் தோனி தலைமை தாங்கும் வெற்றிகரமான சென்னை அணியில் தனது கேரியரின் கடைசி 2 ஐபிஎல் சீசன்களில் விளையாடியது மறக்க முடியாதது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் மிகவும் சுதந்திரமாக விளையாடுங்கள் என்று சொன்னதுடன் தங்களது குடும்பங்களையும் அருகில் வைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்த சென்னை அணிக்காக விளையாடியது மறக்க முடியாத வகையில் அமைந்ததாக பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பழைய நினைவுகளை பகிர்ந்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த 2 வருடங்கள் எனது கேரியரில் நான் விளையாடிய மிகச்சிறந்த வருடங்கள் என்று நினைக்கிறேன். அது நம்ப முடியாததாக இருந்தது. அந்த சமயத்தில் போட்டியின் முடிவைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக களமிறங்கி விளையாடுங்கள் என்ற சூழ்நிலை தான் இருந்தது. ஒருவேளை தோற்றால் கூட நல்லது என்ற நிலைமை தான் இருந்தது. அந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. அந்த 2 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சீசன்களில் வீரர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த வருடங்களில் இந்தியா முழுவதும் நாங்கள் நிறைய சக வீரர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்து சென்னை அணிக்காக விளையாடியது மிகவும் வேடிக்கையாக இருந்தது” என்று கூறினார்.

harbhajan

அப்படி தங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தால் புத்துணர்ச்சியுடன் வீரர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தாலேயே 2018, 2021 ஆகிய சீசன்களில் சென்னை கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க:IND vs AUS : இந்த சிம்பிள் டெக்னிக்க கோச் கிட்ட கத்துக்கோங்க, ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூரியகுமாருக்கு கவாஸ்கர் ஆலோசனை

எனவே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பும் தோனி தலைமையிலான சென்னை கடந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி பின்னடைவை சந்தித்தது. எனவே இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்து 5வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement