2 மாசத்துல அடுத்த கேப்டனா வருவீங்கன்னு சொன்ன அவரே என்னை ட்ராப் பண்ணிட்டாரு – 2005 பின்னணியை பகிர்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பெரும்பாலான போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தானவர். குறிப்பாக மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி 2 முச்சதங்களை விளாசி அதிகபட்ச ஸ்கோர் (319) பதிவு செய்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் 90, 190, 290 என எந்த வகையான சதமாக இருந்தாலும் இதர வீரர்களை போல் பயப்படாமல் தைரியமாக சுயநலமின்றி பவுண்டரி அல்லது சிக்சரை பறக்க விட்டு தொடுவதில் உலகப் புகழ் பெற்றவர்.

Chappell 3

- Advertisement -

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் அதிரடி நாயகனாக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை 2003 – 2012 வரையிலான காலகட்டங்களில் 12 போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தியுள்ளார். குறிப்பாக தென்னாபிரிக்காவில் 2006ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய வரலாற்றின் முதல் டி20 போட்டியின் கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த சமயங்களில் அடுத்த நிரந்தர கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருந்தன. இந்நிலையில் 2005ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் கேப்டன் சௌரவ் கங்குலியுடன் மோதலில் ஈடுபட்டதை அனைவருமே அறிவோம்.

ட்ராப் பண்ணிட்டாரு:
இந்நிலையில் அந்த சமயத்தில் நீங்கள் தான் அடுத்த கேப்டனாக வருவீர்கள் என்று தம்மிடம் தெரிவித்த கிரேக் சேப்பல் 2 மாதங்களில் தன்னை இந்திய அணியிலிருந்தே அதிரடியாக நீக்கி ராகுல் டிராவிட்டை கேப்டனாக நியமித்ததாக வீரேந்தர சேவாக் தெரிவித்துள்ளார். அப்போதிலிருந்து இந்திய அணிக்கு ஒரு இந்தியர் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் கேரி கிறிஸ்டன் அதற்கு விதிவிலக்காக இந்திய அணியினருடன் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Chappell 2

“கிரேக் சேப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த போது தன்னுடைய முதல் அறிவிப்பிலேயே இந்தியாவின் அடுத்த கேப்டனாக சேவாக் வரப்போகிறார் என்று தெரிவித்தார். இருப்பினும் அடுத்த 2 மாதங்களில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் நான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு கேப்டன்ஷிப் இடத்தை தொட முடியாத தனிமைக்கு தள்ளப்பட்டேன். எப்போதுமே நான் நமது நாட்டில் இருக்கும் பயிற்சியாளர்கள் தான் இந்திய அணி சரியாக வழி நடத்தக் கூடியவர்கள் என்பதை நம்பினேன். அதனால் நமக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை”

- Advertisement -

“ஆனால் நான் விளையாடும் போது “ஏன் ஜான் ரைட்டுக்கு பின் மீண்டும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் நமக்கு தேவை” என்று சீனியர் வீரர்களிடம் கேட்டேன். அதற்கு இந்திய பயிற்சியாளர்களிடம் இணைந்து பணியாற்றிய சீனியர் இந்திய வீரர்கள் அனைவரும் இந்திய பயிற்சியாளர்கள் சில வீரர்களிடம் சொந்த விருப்பு வெறுப்புகளை காட்டுவதாக பதிலளித்தனர். அதுவே வெளிநாட்டு பயிற்சியாளராக இருந்தால் அதை வித்தியாசமாக கையாள்வார்கள் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்”

virender sehwag

“ஆனால் உண்மையாக அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரும் டெண்டுல்கர் அல்லது டிராவிட் அல்லது கங்குலி அல்லது லக்ஷ்மண் போன்ற நட்சத்திர வீரர்களை கையாள்வதில் அதிக அழுத்தத்தை சந்தித்தார். என்னைப் பொறுத்த வரை இந்திய அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை என்று நினைக்கிறேன். மாறாக அணி வீரர்களிடம் நட்புடன் பழகும் மேனேஜர் தான் தேவை என்று கருதுகிறேன். மேலும் ஒரு பயிற்சியாளருக்கு ஒரு வீரர் எவ்வளவு பயிற்சி எடுக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க:வீடியோ : ஸ்மித்தை தெறிக்க விட்ட பாண்டியா அசத்தல் சாதனை, சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய குல்தீப் – இந்தியாவுக்கு கடினமான இலக்கு

“அந்த விஷயத்தில் கேரி கிறிஸ்டன் மிகவும் சிறப்பானவர். அவர் வலைப்பயிற்சியில் என்னை 50 பந்துகள் மட்டுமே விளையாட வைப்பார். அதே போல் ராகுல் டிராவிட், சச்சின் ஆகியோரது குணத்தை அறிந்து 200 பந்துகளை விளையாட வைப்பார். அதன் பின் எங்களுக்கு தேவையான இடைவெளியும் கொடுப்பார்” என்று கூறினார்.

Advertisement