இதுவே இந்தியாவா இருந்தா? ஆஸி, இங்கிலாந்தை வறுத்தெடுக்கும் சேவாக் மற்றும் இந்திய ரசிகர்கள் – காரணம் என்ன

Virender Sehwag Pitch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டிசம்பர் 17ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் பச்சை புற்கள் நிறைந்திருந்த பிட்ச்சில் ஆஸ்திரேலியாவின் அற்புதமான பந்து வீச்சில் சரணடைந்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது. டீன் எல்கர் 3, எர்வீ 10 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கெயில் வேரின் 64 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவும் ரபாடாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் டேவிட் வார்னர் 0, லபுஸ்ஷேன் 11, கவாஜா 11 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 27/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களும் டிராவீஸ் ஹெட் 92 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து ஆஸ்திரேலியாவை 218 ரன்களுக்கு சுருட்டிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

தக்காளி சட்னி:
அதை தொடர்ந்து 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை விட ஆஸ்திரேலியாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோண்டோ 36* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 34 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 2, வார்னர் 2, டிராவிஸ் ஹெட் 0, ஸ்டீவ் ஸ்மித் 6 என முக்கிய வீரர்களை அடுத்தடுத்து காலி செய்த ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு போராடினார்.

ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததால் 19 எக்ஸ்ட்ரா ரன்களை பயன்படுத்தி 35/4 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக நேற்று துவங்கிய இப்போட்டி 2 நாட்களில் முடிந்தது நிறைய ரசிகர்களையும் வல்லுநர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இப்போட்டி நடைபெற்ற காபா மைதானம் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் குறைந்தபட்சம் 3 நாட்களை தாண்டி செல்லும்.

- Advertisement -

ஆனால் இம்முறை வேண்டுமென்றே பிட்ச்சில் 5 மில்லி மீட்டர் அளவுக்கு பச்சை புற்கள் இருந்ததால் பந்து வீச்சாளர்கள் கும்மாளம் போட்ட நிலையில் பேட்ஸ்மேன்கள் படாத பாடுபட்டார்கள். அத்துடன் பொதுவாக எப்பேர்பட்ட மைதானமாக இருந்தாலும் முதல் 2 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் இப்போட்டியில் முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 2வது நாளில் அதையும் மிஞ்சி 19 விக்கெட்டுகள் சாய்ந்தன. மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமற்ற பிட்ச்சை கொண்டிருந்த காபா மைதானத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை.

ஆனால் இதுவே இந்நேரம் இப்போட்டி இந்தியாவில் நடந்திருந்தால் எளிதாக வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே பிசிசிஐ தரமற்ற பிட்ச்களை உருவாக்கியதாக அவர்கள் விமர்சிப்பார்கள். குறிப்பாக கடந்த 2021இல் அகமதாபாத் மைதானத்தில் 2 நாட்களில் 842 பந்துகளில் இந்தியா – இங்கிலாந்து மோதிய போட்டி முடிந்த போது மைக்கேல் வாகன் உள்ளிட்ட நிறைய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

ஆனால் இந்தியாவுக்கு வந்தார்கள் ரத்தம் தங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற வகையில் தற்போது அவர்கள் அமைதி காக்கிறார்கள். அதனால் அவர்களை கடுமையாக விமர்சிக்கும் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் வெளிப்படையாக விமர்சித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: எல்லாரும் இந்தியா ஆகிட முடியுமா? 2 நாளில் தெ.ஆ’வை சுருட்டிய ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்கள் பெருமைப்பட காரணம் என்ன

“142 ஓவர்களில் முடிந்த இப்போட்டி 2 நாட்களைக் கூட தொடவில்லை. எந்த மாதிரியான ஆடுகளங்கள் தேவை என்பதைப் பற்றிய விரிவுரை செய்யும் தைரியம் அவர்களிடம் உள்ளது. இதுவே இப்போட்டி இந்தியாவில் நடந்திருந்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிவு டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விட்டது என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி பேசுபவர்களின் பாசாங்குத்தனம் மனதைக் கவர்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement