IND vs ENG : இப்படியா நடந்துகொள்வது, 2 ஜாம்பவான்களிடம் திட்டு வாங்கிய விராட் கோலி – ரசிகர்களும் அதிருப்தி, எதற்குனு பாருங்க

Kohli
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டி அனல் பறக்கும் தொடக்கத்தை பெற்றுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 412 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் சுப்மன் கில், செட்டேஸ்வார் புஜரா, விராட் கோலி, ஹனுமா விகாரி, ஷ்ரேயஸ் ஐயர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என தடுமாறிய இந்தியாவை ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்கள்.

அதில் வெறும் 89 பந்துகளில் சதமடித்து 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் டி20 இன்னிங்ஸ் விளையாட பண்ட் 146 (111) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அவருடன் பேட்டிங் செய்த ஜடேஜா தனது பங்கிற்கு 13 பவுண்டரியுடன் 104 ரன்கள் குவித்து அவுட்டானார். கடைசியில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வம்பிழுத்த விராட்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த கேப்டன் பும்ரா மிரட்டலாக பந்துவீசினார். அதனால் 83/5 என 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து இன்று துவங்கிய 3-வது நாளில் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை விரைவாக அவுட் செய்ய இந்திய பவுலர்கள் தாக்குதலை தொடுத்தனர். அதை சமாளிப்பதற்காக அந்த இருவரும் மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்லெட்ஜிங் செய்து அவுட் செய்யலாம் என்ற முனைப்புடன் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை ஒருசில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அருகருகே சென்று கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து கொண்டு மோதிக் கொண்டனர். அதனால் மைதானத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டதால் அதை சமாதானப்படுத்த அம்பயர் உள்ளே நுழைந்தால் இருவரும் அவரவர்களது இடத்துக்கு சென்றனர். இருப்பினும் வாயை மூடிக்கொண்டு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துமாறு விராட் கோலி தனக்கே உரித்தான பாணியில் ஆக்ரோஷமாக வாய் மீது கை வைத்து மிரட்டலான ஸ்லெட்ஜிங் செய்தார்.

- Advertisement -

வெறிகொண்ட பேர்ஸ்டோ:
அதற்கு “நீங்கள் வாயை மூடிக் கொண்டு இருங்கள்” என்பதுபோல் ஜானி பேர்ஸ்டோ தனது கையால் சைகை செய்து பதிலடி கொடுத்தார். ஆனால் அதை வெறும் சைகையால் மட்டும் செய்யாத அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார். ஆம் அதுவரை 60 பந்துகளில் வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர் விராட் கோலி உரசியதால் தீ பிடித்ததை போல் அடுத்த 59 பந்துகளில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு 88* ரன்களை தெறிக்க விட்டு அதிரடியான சதத்தை விளாசி இறுதியில் 106 (140) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 25, சாம் பில்லிங்ஸ் 36 என முக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் அந்த அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

- Advertisement -

ஜாம்பவான்கள் திட்டு:
இருப்பினும் இப்போட்டியில் விராட் கோலி வம்பிழுத்ததால் வெறி கொண்ட வேங்கையாக அதிரடியாக அடித்த ஜானி பேர்ஸ்டோ நல்ல வேளையாக 106 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஒருவேளை இன்னும் அதிகமாக அடித்திருந்தால் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி கேள்விக் குறியாகியிருக்கும் என்பதால் விராட் கோலி மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அதைவிட இந்த நிகழ்வை கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத முன்னாள் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்வதற்கு முன்பு ஜானி பேர்ஸ்டோவின் ஸ்ட்ரைக் ரேட் : 21, ஸ்லெட்ஜிங் செய்த பின்பு : 150, புஜாராவை போல் விளையாடிக் கொண்டிருந்தவரை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்து பண்ட் போல விளையாட வைத்துவிட்டார்” என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : ஐ.பி.எல் சொதப்பல் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் – நறுக்குன்னு ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜடேஜா

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் தனது டுவிட்டரில் “தயவு செய்து ஜானி பேர்ஸ்டோ எனும் கரடியை வேண்டுமென்றே வம்பிழுத்து மீண்டும் வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement