IND vs ENG : ஐ.பி.எல் சொதப்பல் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் – நறுக்குன்னு ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தென்னாபிரிக்க தொடர் மற்றும் அயர்லாந்து தொடர் ஆகியவற்றை தவறவிட்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த ஜடேஜா தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 104 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

Ravindra Jadeja 1

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான சரிவை சந்தித்த ஜடேஜா தற்போது மீண்டும் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தொடர்ச்சியான தோல்விகளால் மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடமே வழங்கினார். அதன் பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

அதனைத்தொடர்ந்து அவர் தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் அணிக்கு திரும்பிய அவர் சிறப்பான சதம் அடித்துள்ள வேளையில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவிற்கு பிறகு ஜடேஜா பத்திரிகையாளர் சந்திப்பினை எதிர்கொண்டார்.

Jadeja

அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த ஒரு நிருபர் சிஎஸ்கே அணிக்காக கேப்டன்சி செய்த நீங்கள் அதில் ஏற்பட்ட தோல்வி இந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது உங்களது நினைவிற்கு வந்ததா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜடேஜா கூறுகையில் : என்ன நடந்ததோ அது நடந்து விட்டது. ஐபிஎல் போட்டிகளில் நடந்தது பற்றி எதுவும் தற்போது என் நினைவில் இல்லை.

- Advertisement -

தற்போது நான் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். எனவே இந்திய அணிக்காக என்ன தேவையோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டு விளையாடி வருகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் விளையாடும் போது மற்ற எதை பற்றியும் யோசிப்பது கிடையாது. ஐபிஎல் ஏற்கனவே முடிந்து விட்டது. தற்போது இந்தியா அணிக்காக நான் விளையாடி வருவதால் இந்திய அணி வெற்றி பெறுவது மட்டுமே எனது நோக்கம்.

இதையும் படிங்க : IND vs ENG : இப்படி ஒரு பழக்கமா – ரிசப் பண்ட்டை பார்த்து வியக்கும் ரசிகர்கள், எதற்குனு பாருங்க

இங்கிலாந்தில் நாங்கள் இம்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியாக வேண்டிய கண்ணோட்டத்தில் இந்த தொடரை அணுகி விளையாடுகிறோம். எனவே தற்போதைக்கு ஐபிஎல் குறித்த எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. இந்திய அணி குறித்த நினைப்பு மட்டுமே எண்னிடம் உள்ளது என ஒற்றை வார்த்தையில் ஜடேஜா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement