எம்எஸ் தோனி – ரோஹித் சர்மா ஆகியோரில் சிறந்த ஐபிஎல் கேப்டன் யார்? விவாதத்தில் சேவாக் – ஹர்பஜன் சிங் ஸ்வாரஸ்சிய பதில்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த சீசனில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை மற்றும் சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்ததால் இம்முறை மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் அவ்விரு அணிகளும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அதனுடைய கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா முக்கிய காரணமாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

CskvsMi

- Advertisement -

குறிப்பாக 2013ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா அடுத்த 8 வருடத்திற்குள் அசால்டாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள அவர் தரமான கேப்டன் என்பதில் சந்தேகமில்லை.

ரோஹித் சிறந்த கேப்டன்:
மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலக கோப்பையை வென்று நாளடைவில் 3 விதமான உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தது போலவே ஐபிஎல் தொடரிலும் அசத்திய எம்எஸ் தோனி 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்து வருகிறார். மேலும் கேப்டன்ஷிப் செய்வதற்காகவே பிறந்தவர் என்று கங்குலி பாராட்டும் அளவுக்கு வித்தியாசமான முடிவுகளை எடுப்பதில் கில்லாடியான தோனி வெற்றிகள் மற்றும் வெற்றி சராசரி அடிப்படையில் ரோகித்தை விட வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

Sehwag

அதே போல் தோனி தலைமையில் பெரும்பாலான சீசன்களில் சென்னை தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு குறைந்தபட்சம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் கோப்பை வெல்லாத வருடங்களில் ரோகித் சர்மா தலைமையில் பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் சுமாராகவே செயல்பட்டு லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் இந்தியாவுக்காக கேப்டன்ஷிப் செய்து ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகளை வென்ற தோனியை விட 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள ரோஹித் சர்மா தான் சிறந்த ஐபிஎல் கேப்டன் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “இந்த விஷயத்தில் புள்ளி விவரங்கள் அனைத்தையும் பேசக்கூடியது. மேலும் எம்எஸ் தோனி முதலில் இந்தியாவுக்காக கேப்டன்ஷிப் செய்து ஓரளவு அனுபவத்தை பெற்று பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டார்”

Sehwag-1

“ஆனால் ரோகித் சர்மாவின் முதல் கேப்டன்சிப் பயணம் மும்பை இந்தியன்ஸ் அணியில் துவங்கியது. அதிலிருந்து தான் அவருடைய வெற்றிப் பயணமும் துவங்கியது. எனவே அதனால் தான் அவர் அதிகமான பாராட்டுக்குரியவர். குறிப்பாக சௌரவ் கங்குலி போல ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் நிறைய புதிய முயற்சிகளை செய்து வருகிறார். அவர் 2 உலகக் கோப்பை பைனல்களில் விளையாடியுள்ளார். அவரது தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் ஒன் அணியாக வந்துள்ளது. அதனால் தான் இந்த விவாதத்தில் என்னுடைய தேர்வு ரோகித் சர்மாவாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் தோனி தான் சிறந்தவர் என்று ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தேர்வு எம்எஸ் தோனி தான் ஏனெனில் அவர் முதல் வருடத்தில் இருந்தே ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சென்னை வெற்றிகரமாக செயல்படுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடைய கேப்டன்ஷிப் அபாரமானது. மற்ற கேப்டன்களும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்றாலும் என்னுடைய தேர்வு தோனி தான்”

Harbhajan

இதையும் படிங்க:விராட் கோலி பொய் கூட சொல்லிருக்கலாம், மார்க் வாக்’கிற்கு நேதன் லயன் பதிலடி – நடந்தது என்ன

“இருப்பினும் கோப்பையின் அடிப்படையில் பார்க்கும்போது ரோகித் சர்மா 5 வென்றுள்ளார். தோனி 4 வென்றுள்ளார். அவர்கள் இருவரின் தலைமையில் நான் விளையாடியுள்ளேன். குறிப்பாக 10 வருடங்கள் விளையாடிய மும்பை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சென்னையில் விளையாடிய கடைசி 2வருடங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement