இந்தியாவை குறை சொன்னீங்களே.. இப்போ எந்த சாக்க வெச்சு உருட்டப்போறீங்க? பாகிஸ்தானை கலாய்த்த சேவாக்

Virender Sehwag Paksitan.jpeg
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 283 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹீம் ஜாட்ரான் 77*, ரஹ்மத் ஷா 77*, கேப்டன் சாகிதி 48* என டாப் 4 பேட்ஸ்மேன்களே பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி பெரிய ரன்களை குவித்து வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 7 தொடர் தோல்விகளுக்கு பின் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:
அதனால் 3வது தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வது சந்தேகமாக மாறியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் சிறியதாக இருப்பதாக பிட்ச் பிளாட்டாக இருப்பதாலேயே தங்களால் வெற்றி பெற முடியவில்லை என பாபர் அசாம், இமாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தனர்.

அது போக அகமதாபாத் மைதானத்தில் “தில்தில் பாகிஸ்தான்” உத்வேக பாடல் வேண்டுமென்றே ஒலிபரப்பப்படவில்லை என்று விமர்சித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் இது ஐசிசிக்கு பதில் பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாகவும் இவை அனைத்திற்கும் ஃபைனலில் வந்து பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று பாகிஸ்தானை வீரேந்திர சேவாக் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் எப்போதும் கணிக்க முடியாத அணியாக இருந்து வருகிறது. ஆனால் முந்தைய தோல்விகளுக்கு அவர்கள் நொண்டி சாக்குகளை கூறிய விதம் இந்த தோல்வியையும் நிச்சயமாக அட்டையில் வைத்திருந்தது. அவர்கள் தங்களுடைய பலவீனத்தில் கவனம் செலுத்தவில்லை. மறுபுறம் பலமுறை நெருங்கி வந்து இன்று வெற்றிக்கான எல்லைக்கோட்டை தாண்டிய ஆப்கானிஸ்தானுக்கு என்ன ஒரு பெருமையான நாள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அங்க வரக்கூடாதுன்னு.. இந்தியா திட்டம் போட்டு தோற்கடிச்சுட்டாங்க.. ஹபீஸ் வினோத விமர்சனம்

அதே போல நாசீம் ஷா இல்லாதது தங்களது தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருட்டுவது பற்றி ஆகாஷ் சோப்ரா பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நசீம் ஷா நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் இல்லாதது தான் கடந்த 3 தொடர்ச்சியான தோல்விகளுக்கு காரணம் என்று சாக்காக பயன்படுத்துகிறார்கள். என்னை கேட்டால் பாகிஸ்தானில் இருப்பவர்கள் இதைப் பற்றி அந்நாட்டு வாரியத்திடம் கேட்க வேண்டும். ஆசிய கோப்பையில் 4வது இடத்தை பிடித்த நீங்கள் தற்போது உலகக்கோப்பையில் தடுமாறும் இதிலிருந்து எப்படி வெளியே வருவீர்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement