பாகிஸ்தான் அங்க வரக்கூடாதுன்னு.. இந்தியா திட்டம் போட்டு தோற்கடிச்சுட்டாங்க.. ஹபீஸ் வினோத விமர்சனம்

Mohammed Hafeez
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அனைவரின் பாராட்டுகளை அள்ளி வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹீம் ஜாட்ரான் 77*, ரஹ்மத் ஷா 77*, கேப்டன் சாகிதி 48* டாப் 4 பேட்ஸ்மேன்களே பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்களை குவித்து வெற்றி பெற வைத்தியர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.

- Advertisement -

வினோத விமர்சனம்:
மறுபுறம் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் துறையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் இதையும் சேர்த்து 3 தோல்விகளை பதிவு செய்துள்ளதால் செமி ஃபைனலுக்கு செல்வது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டி நடைபெற்ற சென்னை மைதானத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ரசித் கான், முஜீப், நபி போன்ற தரமான ஸ்பின்னர்களை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு பொருந்தும் வகையில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாக முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார்.

அதாவது இத்தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ஆஸ்திரேலியா எடுத்த 199 ரன்களை இந்தியா மிகவும் போராடி சேசிங் செய்து வென்றது. ஆனால் அந்த பிட்ச் மேற்கொண்டு இதே சென்னையில் நடைபெற்ற நியூசிலாந்து – வங்கதேசம், நெதர்லாந்து – இலங்கை போட்டிகளில் பயன்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய நிர்வாகிகளின் அறிவுறுத்தலின்படி சேமிக்கப்பட்டு வைத்திருந்ததாக ஹபீஸ் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு சில உள்நோக்கங்களுக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட பிட்ச் மேற்கொண்டு உபயோகப்படுத்தாமல் பாகிஸ்தான் போட்டிக்காக வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு எதிராக அந்த பிட்ச் இருக்க வேண்டும் என்பதற்காக அதை வேறு போட்டிகளில் பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு முழுசா அவர்தான் காரணம். 4 வருஷமா அவரு ஒன்னும் கத்துக்கல – மொயின் கான் விளாசல்

அதாவது இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் செமி ஃபைனல் வரக்கூடாது என்பதற்காகவே இந்தியா இது போல சுழலுக்கு சாதகமான பிட்ச்சை ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்ததாக அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். முன்னதாக ஏற்கனவே இந்தியா தாங்கள் வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைத்து வருவதாக தெரிவித்த அவர் இது ஐசிசிக்கு பதில் பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement