2011 மாதிரி உ.கோ ஜெயிக்க.. தோனியின் அந்த சிம்பிளான ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க – இந்திய அணிக்கு சேவாக் முக்கிய அட்வைஸ்

Virender Sehwag 4
- Advertisement -

ஆசிய கோப்பையில் 8வது முறையாக வெற்றி வாகை சூடிய இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்று தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறியது. அதனால் அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி காண்பித்துள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10 வருடங்களாக நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியா வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. எனவே சொந்த மண்ணில் கில்லியாக கருதப்படும் இந்திய அணியினர் இம்முறையாவது இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று ஐசிசி தொடர்களில் சந்திக்கும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

சேவாக் அட்வைஸ்:
முன்னதாக அனைத்து வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 2011 உலகக் கோப்பையை வென்ற போதிலும் தோனியின் கேப்டன்ஷிப் அதிகமாக பாராட்டப்படுவதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் களத்தில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை தாண்டி களத்திற்கு வெளியே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், விமர்சனங்கள் போன்றவற்றிலிருந்து இந்திய அணியினரை தள்ளிவைத்த தோனியின் கேப்டன்ஷிப் 2011 உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது உச்சகட்ட அழுத்தத்தை கொடுக்கும் இடமாக பார்க்கப்படும் சமூக வலைத்தளங்களிலிருந்து தற்போதைய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விலகியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அத்தொடரில் நாங்கள் அணி மீட்டிங் போடும் போது செய்தித்தாள்களை படிக்கக்கூடாது வெளியில் பேசுபவர்களின் விமர்சனங்களை கேட்கக்கூடாது என்ற முடிவெடுத்தோம்”

- Advertisement -

“மேலும் அழுத்தத்தை கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பின்பற்றவில்லை. எம்எஸ் தோனி மற்றும் கேரி க்றிஸ்டன் ஆகியோர் எழுதாமல் வைத்திருந்த அந்த விதிமுறையை நாங்களும் பொதுவாக பின்பற்றினோம். அதனால் நாங்கள் ஒரே அணியாக இருந்து மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சிகள் போன்ற விஷயங்களை செய்தோம். ஏனெனில் இது போன்ற சிறிய அம்சங்களால் நீங்கள் உலககோப்பை போன்ற பெரிய தொடரில் கவனத்தை இழக்கலாம்”

இதையும் படிங்க: IND vs AUS : 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சார்பாக அசத்தலான சாதனையை பதிவுசெய்த – வாஷிங்டன் சுந்தர்

“போட்டி துவங்குவதற்கு முன்பும் முடிந்த பின்பும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். குறிப்பாக சாப்பிடும் போதும் எதிரணியை வீழ்த்துவதற்கான திட்டத்தை பேசுவோம். அது தான் நாங்கள் உலககோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும் விமானத்தில் சென்றாலும் ஹோட்டலில் சாப்பிட்டாலும் அங்குள்ளவர்கள் எப்படியாவது வெற்றி பெறுங்கள் என சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் செயலில் மட்டும் கவனம் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதிலேயே தோனி குறியாக இருந்தார். அந்த வகையில் எங்களுடைய செயல் சிறப்பாக இருந்ததால் நாங்கள் வென்றோம்” என்று கூறினார்.

Advertisement