IND vs AUS : 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சார்பாக அசத்தலான சாதனையை பதிவுசெய்த – வாஷிங்டன் சுந்தர்

Washington-Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றினை பெற்றது. இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் இளம் வீரர்களைக் கொண்ட கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியதால் பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சில வீரர்களுக்கு காய்ச்சல் மற்றும் காயம் என இந்திய அணியில் நேற்று 13 வீரர்கள் மட்டுமே இருந்த வேளையில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

- Advertisement -

அதிலிருந்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதனால் 5 முழுநேர பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகள் கழித்து ஒரு அசத்தலான சாதனையை செய்துள்ளார்.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி முதலில் பந்துவீசுகையில் முழுவதுமாக 10 ஓவர் வீசிய வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனாலும் அவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. ஒருபுறம் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு ஏழு ரன்கள் வீதத்தில் ரன்களை குவித்திருந்த வேளையில் வாஷிங்டன் சுந்தர் ஓவருக்கு ஐந்து ரன்களுக்குள் கொடுத்து பந்து வீசியது சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அதே போன்று துவக்க வீரராக களமிறங்கிய அவர் 30 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்திருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முழுவதுமாக 10 ஓவர்கள் வீசியது மட்டுமின்றி அந்த போட்டியில் துவக்க வீரராகவும் களமிறங்கிய வீரராக இந்திய அணி சார்பாக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : வயசான காலத்துல அவங்களுக்கு வழி விட்டு போய் ஓரமா உட்காருய்யா.. புஜாராவை ஓப்பனாக கலாய்த்த ஷிகர் தவான்

இதற்கு முன்னதாக 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாஷிங்டன் சுந்தர் இந்த சாதனையை செய்துள்ளார். இந்திய அணி சார்பாக இந்த பட்டியலில் மனோஜ் பிரபாகர் 21 முறை இதை செய்து முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று சச்சின் டெண்டுல்கர் 20 முறை இதனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் சேவாக், யுவராஜ், கங்குலி, என ஏழு வீரர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement