3 கோல்டன் டக் அவுட்டான அப்றமும் நீங்க ஏன் இதை செய்றீங்க.. ஃப்ரீயா விடுங்க – சூரியகுமாருக்கு சேவாக் முக்கிய ஆலோசனை

Virender Sehwag 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராக உதவும் இந்த தொடரில் மொகாலில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த இந்திய அணிக்கு கில் 74, ருதுராஜ் 71 ரன்கள் குவித்த நல்ல துவக்கத்தை கொடுத்த நிலையில் இஷான் கிசான் 18, ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் 58* ரன்களும் சுரிகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்து 48.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்ட சூரியகுமார் 20 இன்னிங்ஸ் கழித்து அரை சதமடித்து ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

சேவாக் அட்வைஸ்:
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் சற்று பொறுமையாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறார். குறிப்பாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரியில் நடந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டான அவர் மோசமான உலக சாதனை படைத்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

அந்த நிலையில் அணி நிர்வாகத்தின் ஆதரவால் இப்போட்டியில் அசத்திய அவர் அதே வேகத்தில் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங்கை இன்னும் மெருகேற்றுவதற்காக போட்டி முடிந்ததும் ஹோட்டல் அறைக்கு செல்லாமல் ஒரு மணி நேரம் பயிற்சிகள் செய்தார். இருப்பினும் டக் அவுட்டானதையே நினைத்துக்கொண்டு இப்படி வெறித்தனமாக பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமில்லை என அவருக்கு வீரேந்திர சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பழையவற்றை மறந்து மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த பயிற்சி தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் 100% முனைப்புடன் நீங்கள் சில நேரங்களில் அடிப்பீர்கள் சில நேரங்களில் அவுட்டாவீர்கள். அதற்காக நானாக இருந்தால் அடுத்த நாளே பயிற்சி செய்ய மாட்டேன். ஏற்கனவே பயிற்சிகளை செய்த நீங்கள் அந்தப் போட்டியில் தவறு செய்ததால் அவுட்டாகி இருப்பீர்கள்”

இதையும் படிங்க: பேச்சுக்கு சொல்லலாம். அதுக்குன்னு பாகிஸ்தான் அணியில் அந்த இந்திய வீரரை செலக்ட் பண்ண முடியுமா? – இன்சமாம் கிண்டல் பேட்டி

“எனவே அந்த தவறை திருத்துவதில் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். காரணம் உங்களுடைய திறமை எங்கேயும் செல்லாது என்பதால் நீங்கள் பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. அதனால் உங்களுடைய மனதளவிலான அலைகள் தான் முக்கியம். குறிப்பாக நீங்கள் 3 தொடர்ச்சியான டக் அவுட்டான பின் திறமையில் தான் அதிக கவனம் செலுத்தயிருக்க வேண்டும். தற்போது ரன்களை அடித்துள்ள நீங்கள் மனதளவில் உங்களை தயார் செய்ய தான் வேண்டும்” என்று கூறினார்.

Advertisement